Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இது கோவை மாவட்ட திமுக கதை... பொறுப்பாளர்கள் மாற்றப்படாததன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில், கோவை மாவட்ட திமுகவில் நிர்வாக அமைப்பு மட்டுமே மாற்றப்பட்டுள்ளதே தவிர பொறுப்பாளர்கள் மாற்றப்படவில்லை.

திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களை போல் கோவை மாவட்டத்தில் திமுக தலைமை அதிரடி காட்டவில்லை. அதற்கான பின்னணி பற்றி ஆராய்ந்தால், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே கோவை மாவட்ட திமுகவை பற்றியும், அங்கு நடக்கும் அரசியலை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

திமுக தொய்வு

திமுக தொய்வு

கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக தொய்வடைந்த நிலையில் தான் உள்ளது. கண்ணப்பன், பொங்கலூர் பழனிசாமி போன்ற திமுக முன்னோடிகள் மாவட்டச் செயலாளர்களாக இருந்தவரை ஓரளவு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள். கண்ணப்பன் 1993-ல் மதிமுகவுக்கு சென்றபோது, கோவை மாவட்டத்தில் திமுக கூடாரமே காலியானது. ஆனால், அப்போது பொங்கலூர் பழனிசாமி கட்சிக்காக பேயாக உழைத்து கண்ணப்பன் விட்டுச்சென்ற வெற்றிடத்தை முழுமையாக நிரப்பினார். பற்றாகுறைக்கு அவரது மனைவி விஜயலட்சுமி பழனிசாமியும் மாவட்டச் செயலாளராக இருந்து கட்சிபணிகளில் தீவிரம் காட்டினார்.

பஞ்சாயத்து

பஞ்சாயத்து

கடந்த 2011-ல் கோவை மாவட்டத்தில் வெற்றி பெற்ற ஒரே திமுக எம்.எல்.ஏ.வான பொங்கலூர் பழனிசாமி கால்நடைத்துறை அமைச்சரானார். அவரிடம் மாவட்டச் செயலாளர் பதவியும் கூடுதலாக இருந்தன. இங்கு தான் கோவை மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் தொடங்கியது. அப்போது மாநகரச் செயலாளராக இருந்த வீரகோபால், பொங்கலூர் பழனிசாமிக்கு எதிராக ஆட்களை திரட்டி கோஷ்டியை உருவாக்கினார். இந்த கோஷ்டி நாளடைவில் வளர்ந்து, விரிந்து பொங்கலூர் அணி, வீரகோபால் அணி, கார்த்தி அணி, அருண்குமார் அணி என பல அணிகளாக உருவாகியது. இப்போது போதாகுறைக்கு ஆ.ராசா அணியும் அங்கு உருவாகியுள்ளது. இதன் விளைவு கோவை மாவட்ட திமுகவின் சுருதி குறையத்தொடங்கியது.

முயற்சி

முயற்சி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளராக இருந்த காலத்திலேயே கோவை மாவட்டத்தில் உள்ள கோஷ்டி பூசலை ஒழிக்க பல வகைகளில் முயற்சித்தார். அனைத்து தரப்பையும் ஒன்றுபடுத்தி கட்சியை வளர்க்க கடும் முயற்சி மேற்கொண்டார். எத்தனையோமுறை ஹோட்டல் ரெசிடென்ஸியில் வைத்து பஞ்சாயத்து செய்துள்ளார். ஆனால் எதற்கு மசியவில்லை கோவை மாவட்ட திமுகவினர். பொங்கலூர் பழனிசாமியால் கட்சி மாவட்டத்தில் நலிவடைந்துள்ளது, அவரிடம் இருக்கும் பொறுப்பை பறித்தால் கோவை மாவட்டத்தில் திமுகவை ஆஹா, ஓஹோவென வளர்ப்போம் என வீரகோபால், முருகவேல், கார்த்திக், விஜய்சங்கர் தரப்பில் கூறினர். ஸ்டாலினும் அவர்களை நம்பி பொங்கலூர் பழனிசாமியிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியை பறித்து, மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதிய பொறுப்பாளர்களை நியமித்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஆனால் அதற்கு பின்னர் தான் கோவை மாவட்டத்தில் திமுக இன்னும் தொய்வடைந்தது. காரணம் கட்சி நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வதில் கணக்கு பார்ப்பது, தலைமை அறிவிக்கும் போராட்டங்களை கூட பெயருக்கு நடத்துவது என நிலைமை சென்றது. சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் யார் பெரியவர் என்ற ஈகோவால் கோவையில் திமுக அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. இதனிடையே தமிழ்மணி போன்ற நிர்வாகிகளை கழற்றிவிட்டு, தென்றல் செல்வராஜ், ராமச்சந்திரன், முத்துச்சாமி போன்றோரை பொறுப்பாளர்களாக நியமித்தார் ஸ்டாலின். இவர்களின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லாவிட்டாலும் வேறு வழியின்றி அவர்களை பதவியில் நீடிக்கவிட்டுள்ளார் ஸ்டாலின்.

உதயநிதி காரணம்?

உதயநிதி காரணம்?

கடந்த சனிக்கிழமை தொடங்கி நாள்தோறும் திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்தவகையில் இன்று கோவை மாவட்டம் தொடர்பாக திமுக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் நிர்வாக அமைப்பு மட்டுமே மாற்றப்படுவதாகவும் , மற்றபடி மாவட்ட பொறுப்பாளர்கள் தொடர்ந்து செயல்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் பற்றி ஆராய்ந்தால், தென்றல் செல்வராஜ், ராமச்சந்திரன் ஆகிய இருவருமே இளைஞரணிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் விவகாரத்தில் சற்று சீரியஸாக பணியாற்றி அதிக உறுப்பினர்களை சேர்த்தார்களாம். மேலும், கட்சிப்பணிகளிலும் முன்பைக்காட்டிலும் கடந்த இரண்டு மாத கால அளவில் அவர்களிடம் மாற்றம் தென் படத்தொடங்கியுள்ளதாம். இதையெல்லாம் மனதில் வைத்தும், உதயநிதி கொடுத்த நற்சான்றிதழும் தான் கோவை மாவட்ட திமுக பொறுப்பாளர்களை தப்பிக்க வைத்தது என தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+