Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை பீச் டூ திருவண்ணாமலை மெமு பாசஞ்சர் ரயில் சேவை தொடங்கியது! நேர அட்டவணை இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் திருவண்ணாமலை வரை மே 2ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இந்த சேவை தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், அறிவிக்கப்பட்டபடி இன்று முதல் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.

வட மாவட்டங்களில் திருவண்ணாமலைக்கு ரயில் சேவை என்பது மிக குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது. சித்ரா பௌர்ணமி, கிரிவலம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மெண்ட் வரை இயக்கப்படும் ரயில்கள், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையை நிரந்தரமாக திருவண்ணாமலை வரை இயக்கப்பட வேண்டும் என்பது திருவண்ணாமலை, வேலூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

This is the train schedule for Chennai Beach to Thiruvannamalai via Vellore Cantonment

இந்நிலையில் மே மாதம் 2ஆம் தேதி முதல், அதாவது இன்று முதல் இந்த ரயில் சேவை இனி வரும் நாட்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

அறிவிப்பில், "தினமும் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் வேலூர் கண்டோன்மெண்ட் வரை சென்று அங்கிருந்து பென்னாத்தூர், கண்ணமங்கலம், ஒன்னுபுரம், சேதாரம்பட்டு, ஆரணி ரோடு, மதிமங்கலம், போளூர் என திருவண்ணாமலை வரை இரவு 12.05க்கு சென்று சேரும் வகையில் இயக்கப்படும்" என்று தெரிவித்திருந்தது.

அதேபோல, "மே மாதம் 3ம் தேதியிலிருந்து அதாவது நாளை முதல் திருவண்ணாமலையிலிருந்து விடியற்காலை 4 மணிக்கு வண்டி எண் 06033 எனும் பாசஞ்சர் ரயில் புறப்பட்டு காலை 9.50 மணிக்கு சென்னை கடற்கரை வந்து சேரும்" என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்கும் திட்டம் தள்ளி போவதாக தெற்கு ரயில்வே நேற்று அறிவிப்பை வெளியிட்டது. இதனால் பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். மட்டுமல்லாது தள்ளி போகும் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பின்படி இன்று முதல் சென்னை கடற்கரை-வேலூர் கண்டோண்ட்மென்ட் - திருவண்ணமலை மெமு பாசஞ்சர் ரயில் இயக்கப்படும். மறு மார்க்கமாக நாளை (மே.03) முதல் திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நேர அட்டவணையை பொறுத்த அளவில் சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு ரயில் புறப்படும். வேலூர் கண்டோண்மென்ட்-க்கு இரவு 9.50 மணிக்கு வரும். அங்கிருந்து 10 நிமிடங்கள் கழித்து சரியாக 10 மணிக்கு புறப்பட்டு

பெண்ணாத்தூர் - 10.10
கண்ணமங்கலம் - 10.23
ஒன்னுபுரம் - 10.32
சேதாரம்பட்டு - 10.38
ஆரணி ரோடு - 10.46
மாதிமங்கலம் - 10.53
போளூர் - 11.04
திருவண்ணாமலை - இரவு 12.05 மணி

என ரயில் சென்று சேரும். அதேபோல மறு மார்க்கமாக இயக்கப்படும் ரயிலின் நேர அட்டவணையை பொறுத்த அளவில் திருவண்ணாமலையிலிருந்து நாளை விடியற்காலை 4 மணிக்கு இந்த ரயில் கிளம்புகிறது.

போளூர் - 4.23
மாதிமங்கலம் - 4.34
ஆரணி ரோடு - 4.40
சேதாரம்பட்டு - 4.46
ஒன்னுபுரம் - 4.52
கண்ணமங்கலம் - 4.58
பெண்ணாத்தூர் - 5.14

என வேலூர் கண்ட்டோண்மென்டுக்கு அதிகாலை 5.30 மணிக்கும் அங்கிருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கும் இந்த ரயில் வந்து சேருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+