"94B".. பிரேக் எடுத்து மெதுவாக வந்த தாழ்வு நிலை! வானிலையில் இன்று மெகா மாற்றம்! வல்லுனர்கள் வார்னிங்
சென்னை: சென்னையில் இன்று மழை பெய்யுமா, காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை இழக்குமா என்று சென்னை ரெயின்ஸ் வானிலை (@ChennaiRains) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலிமை இழந்தது. இந்த தாழ்வு பகுதி இன்று சென்னை நோக்கி மேலும் நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று இரவு வடசென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னைக்கு மிக அருகில் வந்த காரணத்தால் லேசான மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் ஒரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வானிலை மையம்
இந்திய வானிலை மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள எச்சரிக்கையை இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் விட்டு விட்டு லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்கனவே வலிமை குறைந்துவிட்டது,. அது இன்று மேலும் வலிமை குறையும். முற்றிலுமாக மறையும் முன் இந்த தாழ்வு பகுதி லேசான மழையை சென்னைக்கு கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்று இந்திய வானிலை ஆய்வ மையம் எச்சரிக்கையை கூறியுள்ளது.

சென்னை ரெயின்ஸ்
சென்னையில் இன்று மழை பெய்யுமா, காற்றழுத்த தாழ்வு பகுதி வலிமை இழக்குமா என்று சென்னை ரெயின்ஸ் வானிலை (@ChennaiRains) அமைப்பு கணிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அவர்கள் செய்துள்ள போஸ்டில், சென்னையில் இருந்து நேற்று 120 கிமீ தூரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அப்படியே நிலைகொண்டது. அங்கேயும் நகரும் அங்கேயே நிலை கொண்டது. அதன்பின் 60 கிமீ தொலைவில் நிலை கொண்டு நின்றது. பின்னர் மேலும் நகர்ந்து 30 கிமீ தொலைவில் நிலை கொண்டு நின்றது.

நிலை கொள்ளும் காற்றழுத்தம்
இந்த காற்றழுத்திற்கு 94B என்ற பெயர் உள்ளது. இந்த 94B மொத்தமாக மறையும் முன் சென்னைக்கு மழையை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. நேற்று இரவு வடசென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த 94B காற்றழுத்த தாழ்வு பகுதி மொத்தமாக நம்முடைய நினைவுகளில் இருந்து மறையும் முன் கூடுதல் மழையை கொடுக்குமா என்று பார்க்கலாம். 94B தற்போது சென்னைக்கு அருகே நிலை கொண்டு உள்ளது.

சென்னை
சென்னை சுற்றுவட்டாரத்தில்தான் 94B நிலை கொண்டு உள்ளது. ஆனால் இது இன்று மேலும் வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. வடகிழக்கு காற்று காரணமாக உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். இந்த 94B காரணமாக ஏற்பட்ட ட்விஸ்ட் என்றால், பெங்களூரில் சென்னையை விட இதனால் கூடுதல் மழை பெய்ய போகிறது, என்று சென்னை ரெயின் வானிலை அமைப்பு தெரிவித்து உள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம்
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு ஆந்திர மற்றும் வட தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவி வந்த தாழ்வு பகுதி தற்போது சென்னைக்கு மிக அருகில் வந்துள்ளது. இன்று இது மேலும் வலிமை இழந்து, தாழ்வு பகுதியாக மாறுகிறது. மொத்தமாக வலிமை இழந்து கரையை கடக்காமல் இது காணாமல் போகும். இதனால் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. என்று கூறியுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications