ரஜினியிடமிருந்து "ஜம்ப்" அடிச்ச நேரம் சூப்பர்தான்.. "லட்டு" போல பதவி தந்த திமுக.. "லக்கி" ஜோசப்!!
திமுகவில் தூத்துக்குடி ஜோசப்புக்கு புது பதவி தரப்பட்டுள்ளது
சென்னை: தூத்துக்குடி ஜோசப்புக்கு யோகம்தான்.. திமுகவில் அவருக்கு முக்கிய பதவி தரப்பட்டுள்ளது.. இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், திமுகவின் ஒரு தரப்பினருக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தி வருகிறது.
ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சொல்லிவிட்டதால், அவரது ரசிகர்களும், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்...
வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தியும் ரஜினி தன் முடிவை மாற்றி கொள்ளவில்லை. மாறாக, அரசியலுக்கு வர இயலாது என்று மறுபடியும் ஒரு காரமான அறிக்கை வெளிப்படுத்தினார்...

ரஜினி
அதுமட்டுமல்லாமல், மன்றத்தின் தலைமையும் அவரவர் விருப்பப்பட்ட கட்சிகளில் இணைந்து கொள்ளலாமென்றும் சொல்லிவிட்டனர். இதனால், அப்செட்டின் உச்சிக்கே போன, சில ரஜினி நிர்வாகிகள் மாற்று கட்சியில் இணையவும் முடிவு செய்தனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் 4 மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தனர்... இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது..

அறிவாலயம்
காரணம், ரஜினிக்கு எதிராக கருதப்பட்டது ஸ்டாலின்தான்.. அதனால்தான், ரஜினி சம்பந்தமான போஸ்டர்கள் எதுவானாலும், அதை கொண்டுபோய் அண்ணா அறிவாலயம் முன்பு ஒட்டிவிட்டு வந்தனர். இப்போது அதே அறிவாலயத்தில் ரஜினி மக்கள் மன்றத்தினர் திமுகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அதிலும், தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலின், இணைந்தது மிக முக்கியமான பார்க்கப்பட்டது..

பொறுப்பு
இவர் தூத்துக்குடியில் செல்வாக்கானவர்.. ரொம்பவும் பிரபலம். ரஜினி மன்றத்தின் மிக மிக முக்கியமான நிர்வாகிகளில் இவரும் ஒருவர். அதனால்தான் இவருக்கு திமுகவில் இப்போது மாநில பொறுப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு இணைச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.. இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

மவுசி
இது ரஜினி ரசிகர்களிடையே ஒரு தரப்பில் மகிழ்ச்சியையும் இன்னொரு தரப்பில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. அதேசமயம் திமுகவில் இருக்கும் ஒருசில சீனியர்களுக்கு பொருமலும் ஏற்பட்டு வருகிறது.. மொத்தத்தில் அறிவாலயம் களை கட்டுகிறது.. திமுகவின் மவுசும் கூடுகிறது..!
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications