தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. அறிக்கை கிடைத்ததும் அதிரடி.. 4 போலீசார், 3 வட்டாட்சியர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அரசு அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்த போது, அந்த ஆலையால் மிகக் கடுமையான மாசு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர்.

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட என்பதை வலியுறுத்தியும் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். கடந்த 2018 மே 22இல் அவர் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 துப்பாக்கி சூட

துப்பாக்கி சூட

அந்த போராட்டத்தில் திடீரென குழப்பம் ஏற்பட்டது. போராட்டத்தைக் கலைப்பதாகக் கூறி போலீசார் தடியடி நடத்தினர். அத்துடன் நில்லாமல் துப்பாக்கிச்சூட்டையும் நடத்தினர். அந்த மோசமான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தனர். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே உலுக்குவதாக இந்தச் சம்பவம் அமைந்து இருந்தது.

 அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அறிக்கை

இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன், விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார். கடந்த மே 18ஆம் தேதி இந்த அறிக்கை முதல்வரிடம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது சட்டசபையிலும் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 என்ன நடந்தது

என்ன நடந்தது

மொத்தம் 3000 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், துப்பாக்கிச் சூடு தொடர்பாகப் பல விஷயங்கள் விளக்கப்பட்டு உள்ளது. எந்தவொரு எச்சரிக்கையும் இல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்து உள்ளதாகவும் ஒரே போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார் என்றும் கூறப்பட்டு உள்ளது காட்டில் வேட்டையாடுவது போலச் சுடலை கண்ணு செயல்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

 17 பேர் மீது நடவடிக்கை

17 பேர் மீது நடவடிக்கை

ஒரே போலீசாரை 4 இடங்களில் வைத்துச் சுட வைத்து உள்ளதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. இந்தச் சம்பவத்தில் போலீசாரின் செயல்பாடுகளை அறிக்கையில் கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும், அப்போதைய தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷன், தென்மண்டல ஐ.ஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் உள்பட 17 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

 3 பேர் சஸ்பெண்ட்

3 பேர் சஸ்பெண்ட்

இந்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது பெரும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது. மேலும், இந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளவர்கள் மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கி உள்ளது. அதன்படி இந்த விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. முன்னதாக இதில் காவல் அதிகாரி திருமலை, சுடலைகண்ணு, சங்கர், சதீஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+