திமுகவை விடாமல் விரட்டும் கமல்.. "நிறைய வித்தியாசம் இருக்கே".. ட்வீட் போட்டு காட்டம்...!
இன்றைய பட்ஜெட் குறித்து கமல் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: "தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம் பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது" என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்றைய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பதவி ஏற்று, தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால், பல்வேறு எதிர்பார்ப்புகளை இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்தி உள்ளது.
அந்த வகையில், தன்னுடைய முதல் பட்ஜெட்டை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.. அப்போது பல்வேறு துறைகள் மீதான அறிவிப்புகளையும் வெளியிட்டார்...

தள்ளுபடி
குறிப்பாக, தமிழகத்தில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 3 ரூபாய் அளவுக்கு குறைக்கப்படும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற 2756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்படும், பசுமையான சென்னைக்கு முக்கியத்துவம் அளித்து சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

ஆதரவு
தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை குறித்து, திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவாகவும், வழக்கம்போல எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏகப்பட்ட விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.. அந்த வகையில், பாஜகவின் அண்ணாமலை, "சரியாக நிர்வகிக்கவில்லை என்று முந்தைய அரசும் விமர்சிக்கப்பட்டு இருக்கிறது... அதிகாரத்துக்கு வருவதற்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் குறுகிய காலத்திலேயே 'அம்னீஷியா' (ஞாபக மறதி) ஏற்பட்டுள்ளது'' என்றார்.

கருத்து
இந்நிலையில், கமலும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஒரு ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.. அதில், "தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது" என்று கூறியுள்ளார்.

பாஜக
இப்படித்தான் கடந்த வாரம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தபோது, எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டு, அதில், "நேற்று தமிழக நிதி அமைச்சர் அளித்தது வெள்ளை அறிக்கையா? மஞ்சக் கடுதாசா?" என்று கேட்டிருந்தார்.. அப்படியே எச்.ராஜா போலவே அதே கேள்வியை கமலும் ட்வீட் போட்டு கேட்டிருந்தார்.. "கஜானா காலி எனினும் சுரண்டல் சற்றும் தளர்வின்றி நடைபெறும் என்பதையே அறிக்கை விளக்குவதாக எனக்குத் தோன்றுகிறது. இது வெள்ளை அறிக்கை இல்லை. மஞ்சள் கடுதாசி என்று வேண்டுமானால் சொல்லலாம்" என்றார்.

சந்தேகம்
இன்றைய தினம் பட்ஜெட் பற்றி அண்ணாமலை சொன்னதை போலவே, கமலும் கிட்டத்தட்ட அதே கருத்தை தெரிவித்துள்ளார்.. பாஜக போலவே கமல் ஏன் கருத்து சொல்கிறார் என்ற சந்தேகம் ஒரு பக்கம் எழுந்தாலும், திமுகவுக்கு எதிராக கமல் தொடர்ந்து பேசி வருவது கவனிக்கத்தக்க ஒன்றாகும்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications