சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"அடங்குங்க".. சவுக்கை கையில் எடுத்த ஸ்டாலின்.. எடுத்த எடுப்பிலேயே அதிரடி.. இது வேற மாதிரி..!

2 திமுகவினர் மீது ஸ்டாலின் கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலின், தன்னுடைய முதல் அதிரடியை இன்று தொடங்கி உள்ளார்.. இது திமுகவினருக்கு ஒருவித நடுக்கத்தையும், மற்ற கட்சிகளுக்கு வியப்பையும் தந்துவருகிறது..!

Recommended Video

    சூரையாடப்பட்ட Amma Unavagam | DMK அதிரடி Action | Oneindia Tamil

    தனி பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்றுள்ளது.. இதையடுத்து, வருகின்ற 7ம் தேதி புது அரசின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பதவி ஏற்க இருக்கிறார்... அதற்கான ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் சென்னை முகப்பேர் ஜெ.ஜெ நகர் அம்மா உணவகத்தில் ஒரு விரும்பத்தகாத சம்பவம் ஒன்று இன்று காலை நடந்துவிட்டது..

    வெளிநாடுகளின் கோவிட் உதவிகள்.. வந்த சரக்கெல்லாம் எங்க? - 'பதில்' தர தடுமாறும் அமைச்சகங்கள்வெளிநாடுகளின் கோவிட் உதவிகள்.. வந்த சரக்கெல்லாம் எங்க? - 'பதில்' தர தடுமாறும் அமைச்சகங்கள்

     கருணாநிதி

    கருணாநிதி

    அந்த அம்மா உணவகத்தின் முன்பாக இருந்த ஜெயலலிதா படத்துடன் இருந்த விளம்பர பேனரை திமுகவினர் சிலர் அடித்து உடைத்துள்ளனர்.. அதை தூக்கி தூர போட்டுள்ளனர்..மேலும், அங்கு கருணாநிதியின் படத்தையும் வைக்க முயன்றுள்ளனர்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..

    சம்பவம்

    சம்பவம்

    அதிமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. இது சம்பந்தமான வீடியோவும் இணையத்தில் வைரலானது. வரும் 7ம் தேதி ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவத்தை திமுகவினர் அரங்கேற்றி உள்ளது, அக்கட்சியின் தலைமைக்கு பெரிய தர்மசங்கடத்தை தந்துள்ளது.. ஆட்சிக்கு வரும் முன்பே அராஜகமா? என நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை பதிவிட்டனர்.

    அடாவடி

    அடாவடி

    எனினும், திமுக தரப்பு மீது எந்தவித கெட்ட பெயரும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ஸ்டாலின், இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும், ஆக்‌ஷனில் இறங்கி உள்ளார்.. அம்மா உணவகத்தில் அடாவடி செய்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.. உடனடியாக அவர்களை கட்சியை விட்டு நீக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    மேலும், அந்த போர்டை மறுபடியும் மாட்டவும் உத்தரவிட்டுள்ளார் கட்சி பாரபட்சம் பார்க்காமல் இந்த நடவடிக்கையை ஸ்டாலின் எடுத்து காட்டி உள்ளார்.. கடந்த வாரம்கூட இதை பற்றி நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.. எப்படி ஜெயலலிதா அன்று, தன் கட்சியை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அப்படி ஒரு அதிரடி அரசியலைதான் ஸ்டாலினும் இனி எடுக்க போகிறார் என்றும், யாருக்காவும் இனி தயவுதாட்சண்யமே பார்க்க போவதில்லை என்றும் தெரிவித்திருந்தோம்.

     உத்தரவு

    உத்தரவு

    அந்த வகையில் இன்றைய தின உத்தரவு மிகவும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.. இன்னமும்கூட ஓசி பிரியாணி என்றாலும், பியூட்டி பார்லர் என்றாலும் திமுக மீதான மதிப்பீடு தானாகவே குறைந்துவிடுகிறது.. அதன்மீதான "கறை" இன்னமும் நீங்கவில்லை.. அன்று மாதிரி இனியும் இருக்கக்கூடாது, ஆட்சி பொறுப்புக்கு வந்தாச்சு.. பொறுப்புடன் நடக்க வேண்டும் என்று இதன் மூலம் கட்சியினருக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

    கணக்கு

    கணக்கு

    அதுமட்டுமல்ல, இந்த விஷயத்தில் திமுகவினர் செய்ததும் மாபெரும் தவறே.. ஏழைகளின் பசியை போக்க, இந்தியாவே வியந்து பார்த்த "அம்மா உணவகம்" என்ற திட்டத்தை கொண்டு வந்ததே ஜெயலலிதாதான்.. இதனால் எண்ணற்ற அடித்தட்டு மக்களின் வயிறு நிறைந்துள்ளது.. "கலைஞர் உணவகம்" என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அவை இனிதான் நடைமுறைக்கு வரும்.

     மாற்றம்

    மாற்றம்

    அதற்காக, இவ்வளவுகாலம் ஏழைகளின் பசி ஆற்றி கொண்டிருந்த அம்மா உணவகத்தை திமுகவினர் உதைத்து நொறுக்குவது அராஜகமே.. இதற்குதான் ஸ்டாலின் சவுக்கடியை தந்துள்ளார். கட்சிக்கு அப்பாற்பட்டு, மக்கள் நலன் என்ற அடிப்படையிலும் திமுகவினர் தங்கள் பார்வையை விரிவுபடுத்தி கொள்ள வேண்டி உள்ளது. இனி வரும் காலங்களிலும், இதேபோன்றதொரு அதிரடிகளில் ஸ்டாலினும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தால், திமுக மீதான "கறை சொற்கள்" காலப்போக்கில் மாறுவது நிச்சயம்..!

    English summary
    Those who took the name plate of the Amma Unavagam fired, DMK Leader MK Stalins order
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X