அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை .. யூடியூபர் இர்ஃபானுக்கு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்
சென்னை: யூடியூபர் இர்ஃபானுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது எக்ஸ் பக்கத்தில், யூடியூபர் இர்ஃபானின் சமீபத்திய வீடியோ மக்களிடத்தில் முகம் சுளிக்க வைத்துள்ளது. அனைத்தையும் வீடியோ எடுத்து பணமாக்கும் அவரது செயல் மிகவும் மட்டமானது."அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று தெரிவித்துள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் எடுத்து வீடியோக்கள் சில சர்ச்சையாகி வருகின்றன. அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு சமூகவலைதளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது.

அடுத்ததாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது மனைவிக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும் போது உடனிருந்த யூடியூபர் இர்ஃபான், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியதோடு, அதனை வீடியோவாகவும் வெளியிட்டதும் பெரிய சர்ச்சையானது. இதுதொடர்பாக இர்ஃபான் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தில் இர்ஃபான் மன்னிப்பு கேட்டதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.. இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகள் ஒருபுறம் எனில், அவர் எல்லாவற்றையும் வீடியோவாக எடுத்து வெளியிடுவதாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வந்தனர். அப்படி குற்றம்சாட்டிய பலரும் இர்பானின் புதிய வீடியோவை பார்த்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ரமலான் பண்டிகையான நேற்று இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ஏழைகளுக்கு உதவி செய்தார். அவர் ஏழைகளுக்கு பையில் உணவு, துணி உள்ளிட்ட உதவி பொருட்களை வழங்கியிருந்தார். இதுபற்றி இர்ஃபான் தனது யூடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் ஒருவருக்கு இர்ஃபானின் மனைவி பொருளை காரில் உள்ளே அமர்ந்திருந்தபடி வழங்குகிறார். அதை இர்ஃபான் மனைவி கையில் இருந்து கொடுப்பதற்குள், வேகமாக கையை இழுத்து, அந்த நபர் பறித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இர்ஃபான், இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்..
ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டியிருந்தார். மேலும் தனது மனைவியின் கையில் வாங்கும் போது, ஒருவர் கையில் நகத்தை வைத்து இழுத்துவிட்டதாகவும், அதனால் கோபம் அடைந்ததாகவும் வீடியோவில் கூறியிருந்தார்.
இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் இர்ஃபானை விமர்சித்து வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "காருக்குள்ள உக்காந்து குடுத்தா கிடைக்குமோ கிடைக்காதோ ன்னு முண்டியடிச்சி வரத்தான செய்வாங்க... அதுக்கென்னமோ கொள்ள காரங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி பிஜிஎம் அப்புறம் நக்கல்னு... இது ஒரு கன்டென்ட்.. திருந்தவே மாட்டாரா இவரெல்லாம்" என ஒருவர் வசைபாடியிருந்தார். இதேபோல் பல நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் யூடியூபர் இர்ஃபானுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது எக்ஸ் பக்கத்தில், யூடியூபர் இர்ஃபானின் சமீபத்திய வீடியோ மக்களிடத்தில் முகம் சுளிக்க வைத்துள்ளது.அனைத்தையும் வீடியோ எடுத்து பணமாக்கும் அவரது செயல் மிகவும் மட்டமானது."அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்" என்று தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications