சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை ஊதி பெருசாக்காதீங்க.. சி.ஐ.டி.யூ-வுக்கு தொமுச வைத்த வேண்டுகோள்!
சென்னை: சாம்சங் தொழிலாளர் பிரச்சனையை ஊதிப் பெரிதுபடுத்துவதை விடுத்து, தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என சிஐடியுவுக்கு தொமுச பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொமுசவின் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஒரு மாத காலமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சாம்சங் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் போராட்டம் தொடர்ந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசு தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டிஆர்பி ராஜா, சி.வெ.கணேசன் ஆகியோர் அடங்கிய குழு மற்றும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள், போராட்டக் குழுவின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் 14 அம்ச கோரிக்கைகளுடன் ஊழியர்களில் ஒரு தரப்புக்கும், சாம்சங் நிர்வாகத்தினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அதேசமயம், சிஐடியூ சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்காததால் சிஐடியூ தொழிற்சங்கத்தினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சி.ஐ.டி.யூ-வுக்கு திமுகவின் தொழிலாளர் சங்கமான தொ.மு.ச ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து தொமுச பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் இல்லாத போதும் கூட இடதுசாரிகளை ஆதரித்த ஓர் இயக்கம். நாடாளுமன்றத் தேர்தலி்ல் திருச்சியில் போட்டியிட்ட அனந்த நம்பியாருக்கு திமுகவை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா, திமுகவினரின் கருத்தை நிராகரி்த்து ஆதரவு தெரிவித்தார். அதே போல், உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 2010ல், போக்குவரத்துக் கழக தொழிற்சங்கம் தொடர்பான தேர்தலில், சிஐடியு 14 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றது.
அதை கேள்விப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தனது வருத்தத்தை தெரிவித்தார். அத்துடன், சென்னை, சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள தொழிற்சாலை போராட்டங்களில் இடதுசாரிகளை அழைத்து பேசி இணக்கமான முடிவுகளை எடுத்தது திமுக அரசு. கடந்த 2006-11 ஆட்சிக்காலத்தில் ஹூண்டாய் நிறுவன போராட்டத்தில் திமுக அரசு சுமுகமாக பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
சர்வதேச தொிழலாளர் அமைப்பு கொண்டுவந்த தீர்மானம் 1949 முதல் சங்கம் அமைக்கும் உரிமை, கூட்டு பேரம் ஆகிய தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. ஆனால், சங்கங்கள் எவ்வித பாரபட்சமும் இன்றி பதிவு செய்யப்படுவதுடன், பேச்சுவார்த்தைக்கு வராத நிர்வாகத்தை அழைத்து பேசுவதும் தமிழகத்தில் தான். இதனால், பலன் அடைந்தது அதிகமாக சிஐடியு சங்கம் தான்.
இதை மறந்து சாம்சங் பிரச்சினையை மிகவும் பெரிதுபடுத்தி அதனை முடிவுக்கு கொண்டுவர இயலாத நிலை ஏற்படுகிறது. இதற்கு எங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். சாம்சங் போராட்டம் சம்பந்தமாக நீங்கள் (சிஐடியு) கொடுத்த அறிக்கையில் இருந்து, சங்கத்தை பதிவு செய்ய தொழிலாளர் துறையில் தாமதமானதால், நீங்கள் நீதிமன்றம் சென்றுள்ளீர்கள். நீதிமன்றத்தில் வழக்கை தேக்க நிலையில் வைத்து தொழிலாளர் துறை பதிவு எண வழங்கவில்லை என்று அரசின் மீது குற்றம் சொல்கிறீர்கள். இதில் என்ன நியாயம் உள்ளது. தீர்ப்பு வந்ததும் பதிவு எண் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி எந்த ஒரு சங்கத்தையும் அங்கீகரிப்பதற்கான சட்டம் தற்போது இல்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். சட்டம் இல்லாத போது சட்டப்படி அரசு நடக்கவில்லை என குறை கூறுவதில் என்ன நியாயம் உள்ளது?
இந்தப் பிரச்சினை குறித்து தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் உங்களுடன் பேச வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாம் உங்கள் கோரிக்கைகளை தொழிலாளர் நல அமைச்சர் முன்பாக விவரித்து அதன் மீது தீர்வு காண்பதற்கு முயற்சிகள் தொடர்ந்து எடுத்து வருவதை மறத்திருக்கமாட்டீர்கள். அதன் பிறகு தொழிலாளர் துறையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் நிர்வாகம் ஒத்துக் கொள்ளவில்லை என்று நீங்கள் எடுத்துக் கூறிய பிறகு அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கூறியது அரசு மேற்கொண்ட முயற்சி தொழிலாளர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு இல்லையா?
அமைச்சர்கள் குழுவிடம் நீங்கள் தொழிற்சங்கப் பதிவு பிரச்சினை நீதிமன்றத் தீர்ப்பு வந்த பிறகு அந்த கோரிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டீர்கள் ஆனால் உங்கள் கோரிக்கை பட்டியலை தந்து இதன்படி நிர்வாகம் எங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்று கேட்கப்படவில்லையா? ஆனால் சாம்சங் நிர்வாகம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஊதிய உயர்வு வழங்கி வருகிறது. அதன்படி 1.4.2025-க்குப் பிறகுதான் புதிய ஊதிய உயர்வு வழங்க முடியும் என்று நிர்வாகம் கூறிவிட்டது.
இந்நிலையில் அமைச்சர்கள் சாம்சங் நிர்வாகத்தை நிர்பந்தித்து இடைக்கால நிவாரணமாக ரூ.5000 மற்றும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும், வைக்காத சில கோரிக்கைகளையும் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக உங்களிடம் தெரிவித்தது தொழிலாளர் ஆதரவு நிலையில்லையா? இவை அனைத்தையும் மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி, இப்போது போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் பல சிக்கல்கள் மேலும் மேலும் உருவாகி வருகிறது. இதனால் சகோதர அமைப்புகளாக உள்ளவர்கள் எவ்வாறு நல்ல முடிவு எடுக்க முடியும் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மேலும், ஊதிய உயர்வு கோரிக்கையில் சாம்சங் நிறுவனத்தை நிர்பந்தித்து நிவாரணமாக ரூ.5000 மற்றும் நீங்கள் வைத்த கோரிக்கைகள் சிலவற்றையும், வைக்காத கோரிக்கைகளையும் சாம்சங் நிர்வாகம் ஏற்றதாக உங்களிடம் தெரிவித்தனர். இது தொழிலாளர் ஆதரவு நிலைப்பாடு இல்லையா?
இவை அனைத்தையும் மறைத்து புதிய கோணத்தில் அரசை நிர்வாக ஆதரவு நிலை எடுப்பது போல் சித்தரித்து போராட்டத்தை பெரிதுபடுத்தி, முடிவுக்கு கொண்டுவருவதில் பல சிக்கல்கள் உருவாக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளும் போது அவரை தரம் தாழ்ந்து பேசுவதும், அவரை விமர்சிப்பதும், பிரச்சினைக்கு தீர்வு காண சரியாக இருக்குமா?
அரசு எல்லா நிலைகளிலும் தங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு உறுதுணையாக தொமுச பேரவை செயல்படுகிறது. இந்நிலையில தாங்கள் பிரச்சினையை பெரிதுபடுத்தாமல் முடிவுக்கு கொண்டுவருவதில் தங்கள் அனுபவத்தை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications