ஆஹா.. அடுத்தடுத்து 3 நாள் தொடர் விடுமுறை! 2 மாவட்ட மக்களுக்கு மட்டும் ஹேப்பி நியூஸ்! எஞ்சாய் மக்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 2 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சுதந்திர தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரத் தேரோட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் அவதரித்த தினமாகக் கருதப்படும் ஆடிப்பூரம் வைணவ சமயத்தில் மிகவும் முக்கியமான திருவிழாவாகும்.

Virudhunagar Holiday

குறிப்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் தேரோட்டத்தை காண தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டும் ஆண்டாள் கோயிலில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி விழாவில் பங்கேற்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளது. அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நடைபெறும் ஆடிப் பூரத் திருவிழாவையொட்டி, அந்த மாவட்டத்திற்கும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு மாவட்ட மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த உள்ளூர் விடுமுறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.

இருப்பினும், மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் அவசர அரசுப் பணிகளை மேற்கொள்ள தேவையான குறைந்தபட்ச பணியாளர்கள் மட்டும் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் காரணமாக, விருதுநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை, ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின அரசு விடுமுறை, அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+