யார் அந்த "கருப்பு ஆடு".. அடுத்தடுத்த பரபரப்பு.. ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது
சென்னை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததான புகாரில் கைது செய்யப்பட்டுள்ள காமர்ஸ் டீச்சர் ராஜகோபாலனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது... இதையடுத்து இந்த வழக்கு சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் வேலை பார்த்து வந்த ஆசிரியர் ராஜகோபாலன் மீது கடந்த வாரம் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது..
ஆன்லைன் வகுப்புகளின் போது அரை நிர்வாணத்துடன் இருந்ததாகவும், குளித்துவிட்டு அப்படியே வந்து மாணவிகளிடம் பேசுவதாகவும், இதில் ஒரு மாணவியை சினிமாவுக்கு கூப்பிட்டதாகவும், புகார்கள் எழுந்தன.

புகார்கள்
இந்த புகார்களை எல்லாம் ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட மாணவியே சோஷியல் மீடியாவில் பதிவிட்டார்.. இவரை தொடர்ந்து, இதே பள்ளியில் இதே ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில மாணவிகளும் புகார்களை தந்தனர்.. இதனால் தமிழகமே அதிர்ச்சிக்கு உள்ளானது...

சலசலப்பு
ராஜகோபாலனை கைது செய்தனர்.. ஜுன் 8ம் தேதி வரை ஜெயிலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால், ஆசிரியர் கைதானாரே தவிர, இந்த பள்ளி மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.. மற்றொருபக்கம், சாதி ரீதியாகவும் விவாதங்களும், கருத்துக்களும் சோஷியல் மீடியாவில் உருவெடுத்தன..

கருப்பு ஆடு
இதனிடையே, கைதான ராஜகோபாலன், "நான் பல மாணவிகளிடம் இப்படி பேசியிருக்கேன்.. இந்த பள்ளியில் இப்படி என்னை போலவே பல கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்" என்று வாக்குமூலம் தந்திருந்தார். இந்த தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. தற்போது, ஆசிரியர் ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்திருந்தனர்...
Recommended Video

அனுமதி
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது... இந்த 3 நாள் நடக்க போகும் விசாரணையில், ராஜகோபாலனின் லீலைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதைதவிர, அந்த கருப்பு ஆடுகள் குறித்த தகவலை பெறும் முயற்சியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்..!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications