Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரைப்பார் கரைச்சால் கல்லும் கரையும்.. களத்தில் அமைச்சர்கள்! அதிமுக மாஜிகளை தட்டித் தூக்கும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரே மாதத்தில் அதிமுகவில் இருந்து மூன்று புள்ளிகளை தூக்கி சம்பவம் செய்திருக்கிறது திமுக முன்னாள் அமைச்சர் அன்புராஜா முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தொண்டைமான் முன்னாள் எம்பி மைத்திரேயின் வரிசையில் அதிமுக பாஜக கூட்டணியால் அதிருப்தியில் இருக்கும் அதிமுக தலைவர்களை குறி வைத்து களத்தில் இறங்கி இருக்கின்றனர் அந்தந்த பகுதி அமைச்சர்கள் விரைவில் மேலும் பல முக்கிய புள்ளிகள் திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது

தேசிய அளவில் பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. கடந்த காலம் தொடங்கி தற்போது வரை ஏதாவது ஒரு திராவிட கட்சிகள் தயவால்தான் அக்கட்சி எம்எல்ஏக்களையே பெற முடியும் என்ற நிலை இருக்கிறது.

2021 தேர்தலிலும் அப்படித்தான் நடந்தது. அதே நேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணியால் வெற்றி பெற விட முடியவில்லை. குறிப்பாக ராயபுரம் தொகுதியில் மிக பலமாக இருந்த ஜெயக்குமார் தோல்வியடைந்ததற்கு பாஜக கூட்டணி தான் காரணம் என அவரே பேசி இருந்தார்.

Three Key AIADMK Leaders Join DMK

அதிமுக பாஜக கூட்டணி

தொடர்ந்து தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமைகளை அவர் விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது, தொடர்ந்து முன்னால் அமைச்சர்கள் பதிலடி கொடுக்க அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது, இனிமேல் பாஜகவுடன் கூட்டணியே இல்லை என எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதே நேரத்தில் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட சில முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் பாஜக கூட்டணியை அமைக்க தீவிரமாக காய் நகர்த்தி வந்தனர். அதற்கு பலனும் கிடைத்தது.

அன்வர் ராஜா

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. முதல் முறையாக அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பாஜக கூட்டணியை பொருந்தா கூட்டணி என விமர்சித்ததோடு சிறுபான்மை வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காது என கூறி இருந்தார். அவர் அதிருப்தியில் இருப்பது தெரியவந்த நிலையில் திமுக தலைவர்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

திமுக

அதன் பயனாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார் அன்வர் ராஜா. அதிமுகவின் சிறுபான்மை தலைவர்களின் முக்கியமானவராக கருதப்பட்ட அன்வர் ராஜா ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக இருந்தார். அவரது மறைவுக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மீது அதிருப்தியில் இருந்து அவர் பிறகு கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தார். மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இணைந்தாலும் பாஜக கூட்டணியால் வெறுப்பில் இருந்த அவர் திமுக அமைச்சர்கள் மூலம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

கார்த்திக் தொண்டைமான்

தொடர்ந்து புதுக்கோட்டையில் வலுவாக மக்கள் செல்வாக்குடன் இருக்கும் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். அதில் அமைச்சர் ரகுபதியின் பங்கு அதிகம் என சொல்லப்படுகிறது. புதுக்கோட்டையை பொருத்தவரை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலுவாக இருக்கும் நிலையில் அவரை எதிர்த்து கார்த்திக் தொண்டைமான் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கலாம் என சொல்லப்படுகிறது. தொடர்ந்து பல முன்னாள் அமைச்சர்கள், தலைவர்கள் திமுகவில் இணைவார்கள் என சொல்லப்பட்டது.

மைத்ரேயன்

அந்த வகையில் மயிலாப்பூரில் பாரம்பரிய மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த மைத்ரேயனும் தற்போது திமுகவில் இணைந்து இருக்கிறார். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அவர் இந்த முறை மீண்டும் டெல்லிக்கு செல்லலாம் என ஆசைப்பட்டார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு ஒப்புக் கொள்ளாத நிலையில் அதிருப்தியில் இருந்த அவர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மூலமாக தற்போது திமுகவில் இணைந்திருக்கிறார். அவருக்கும் ஏதாவது ஒரு மாநில பொறுப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அவர் போட்டியிடலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

இப்படி அதிமுக தரப்பில் அதிருப்தியில் இருக்கும் முக்கிய புள்ளிகளை திமுகவுக்கு இழுக்க அமைச்சர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கேற்றார் போல் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தங்கள் பகுதியில் இருக்கும் அதிமுக தலைகளை பட்டியலெடுத்து வருகின்றனர். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு, அமைச்சர் பதவி, கட்சியில்முக்கிய பொறுப்பு என பல்வேறு காரணிகளை எடுத்துக்காட்டி அவர்களை திமுகவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல முன்னாள் அமைச்சர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்களாம். விரைவில் பல முக்கிய தலைகள் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவலாம் என சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+