ஷாக்.. அவசர முடிவெடுக்கும் காவலர்கள்! ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று பேர் தற்கொலை? பணிச்சுமை காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகத்தில் தென்காசி, திருவள்ளூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரே நாளில் மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் காவல் பணி செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 காவலர்கள் தற்கொலை

காவலர்கள் தற்கொலை

இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மூன்று காவலர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் காவல்துறையினரின் குடும்பத்தினர் இடையே பெரும் அச்ச உணர்வையும் ஏற்படுத்தி இருக்கிறது. ''

 ஒரே நாளில் 3 பேர்

ஒரே நாளில் 3 பேர்

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளரான பார்த்திபன் இன்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் யுவராஜ் கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை காவலர் பிரபுவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 என்ன காரணம்?

என்ன காரணம்?

தனிப்பட்ட காரணங்கள் கடன் பிரச்சினைகள் குடும்ப விவகாரம் பணிச்சுமை போன்ற பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்த ஆண்டில் மட்டும் காவலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு பணிகளை ஈடுபட்டிருக்கும் காவலர்களே அதிக அளவில் தற்கொலை கொள்ளும் நிலையில், பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 ஆலோசனை அவசியம்

ஆலோசனை அவசியம்

பல்வேறு காரணங்களுக்காக காவல்துறையினர் தற்கொலை முடிவை தேடிச் சென்றாலும் நாளுக்கு நாள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பது கவலை கொள்ள செய்வதாகவும் மேலும் காவலர்களின் கைகளில் ஆயுதங்கள் இருப்பது அவர்களை அவசர முடிவுக்கு தருவதாக கூறும் மனநல மருத்துவர்கள், குறைந்தது மாதத்திற்கு ஒரு முறையாவது காவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மனநல ஆலோசனை வழங்குவது அவசியம் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+