உள்ளாடையில் கூடவா?.. தலைமுடியை அவிழ்த்து பார்த்த பெண் போலீஸ்.. 3 பெண்கள் செய்த பகீர் காரியம்..!
உள்ளாடையில் தங்கம் வைத்து கடத்திய 3 பெண்கள் கைதானார்கள்
சென்னை: 3 பெண்கள் செய்த காரியத்தை பார்த்து கஸ்டமஸ் அதிகாரிகளே மிரண்டு போய்விட்டனர்.. இதனால் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் ஏர்போர்ட்களில் தங்கம் கடத்தல் நடக்காதவண்ணம் அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து அவற்றை தடுத்து வருகிறார்கள்.
அதில் பிடிபடுபவர்களையும் பிடித்து கைது செய்து உள்ளே வைக்கிறார்கள். அப்படியும் ஒருசிலர் டிமிக்கி கொடுத்து தங்கத்தை கடத்தவும் செய்கிறார்கள்..

ஏர்போர்ட்
இது நிறைய சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் நடந்து வருகிறது.. அதனால்தான் அங்கெல்லாம் கூடுதல் விழிப்புணர்வுடன் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை ஏர்போர்ட்டில் பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் பயணிகள் சிறப்பு விமானம் ஒன்று சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளது.. அதில் வந்த பயணிகளிடம் விமான நிலைய சுங்க அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை மேற்கொண்டனர்.

சந்தேகம்
அப்போதுதான் 3 பெண்கள் மீது சந்தேகம் வந்தது.. அந்த 3 பெண் பயணிகளையும் நிறுத்தி சோதனையிட்டனா். 3 பேருமே ஒன்றாக சேர்ந்து பயணம் செய்துள்ளது தெரியவந்தது.. 3 பேருமே சென்னையை சேர்ந்தவர்கள்.. அவர்கள், தங்களிடம் சுங்கத்தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றார்கள்.. இதனால் சுங்க அதிகாரிகளுக்கு மேலும் அவர்கள் மீது சந்தேகம் வந்தது..

கேள்விகள்
எனவே 3 பேரையும் தனித்தனியாக அழைத்து கேள்விகள் கேட்கப்பட்டது.. ஆனால், 3 பேருமே அந்த விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.. இதனால் பெண் சுங்க அதிகாரிகள், மீண்டும் அடுத்து அவர்களை, தனியாக உள்ளே அழைத்து வந்து சோதனையிட்டனர். அப்போது அந்த பெண்கள் தலையில் அணிந்திருந்த விக் மீது சந்தேகம் வந்தது.. காரணம் 3 பேருமே சொல்லிவைத்தாற்போல் விக் அணிந்திருந்தனர்.. அதனால், அவர்களின் கூந்தலை அவிழ்த்து பார்த்து, அந்த விக்கை வெளியே எடுத்தனர்.. அதற்குள் தங்க வளையல்கள், சிறு தங்கக்கட்டிகள் பளபளவென மின்னி கொண்டிருந்தன..

உள்ளாடை
பிறகு, அந்த பெண்களின் உள்ளாடையையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப்பசைகள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா்... 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அந்த தங்கத்தின் மதிப்பு மொத்தம் 525 கிராம் என்கிறார்கள்.. அதாவது ரூபாய் 23 லட்சம் இருக்குமாம்.. அவ்வளவு மதிப்பு வாய்ந்த தங்கத்தைதான் தலைமுடியிலும், உள்ளாடையிலும் மறைத்து வைத்து வந்துள்ளனர்..!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications