தக் லைஃப் படத்தை 5 முறை பார்ப்பேன் என்ற விமர்சகர் பிரசாந்த், ஒருமுறைக்கு பிறகு சொன்னது என்ன பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா விமர்சகர் இட்ஸ் பிரசாந்த் தக் லைஃப் படம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். முன்பு படம் வெளியாகும் முன்பு, 5 வாட்டி தக் லைஃப் பார்க்க போவதாக கூறியிருந்தார். இப்போது அவரது விமர்சனத்தை பாருங்கள். கழுவி ஊற்றியதோடு 5 முறையும் உடலை கல்லாக்கி பார்க்கப்போகிறேன் என கூறியுள்ளார். படத்தை பார்க்க போகும் நாம் தான் தக் ஆகவே இருக்க வேண்டும் என்றும் படத்தை பார்த்து முடிக்கும் முன்பு நாம் ஒருவழியாகி விடுவோம் என்றும், படத்தின் எடிட்டிங், இசை, கேரக்டர்கள் என எதுவே சரியல்லை என்றும் விமர்சித்துள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 'தக் லைப்' என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இதில், நடிகர் சிம்பு, நடிகை திரிஷா உள்பட பல முன்னணி திரை நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் கர்நாடகா தவிர இந்தியா முழுவதும் வெளியாகி உள்ளது. பல நாடுகளில் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது..

THUG LIFE its Prashanth review who said he would watch the movie THUG LIFE five times say now

அண்மையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி பிறந்ததாக குறிப்பிட்டார். கன்னட சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமாரை தன்னுடைய குடும்பத்தில் ஒருவர் போன்றவர் என்று குறிப்பிடும் நோக்கில் அப்படி கூறியிருந்தது சர்ச்சையானது. கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூறிய கமலின் பேச்சுக்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சர்ச்சை காரணமாக படத்திற்கு நன்கு விளம்பரமும் கிடைத்தது. பலரும் தக் லைஃப் படம் பார்க்க ஆர்வம் காட்டினார்கள்.

இந்நிலையில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. சினிமா விமர்சகர் இட்ஸ் பிரசாந்த் தக் லைஃப் குறித்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். அதில் "படத்தை பார்க்க போகும் நாம் தான் தக் ஆகவே இருக்க வேண்டும். தக் லைஃப் குறித்து வரிசையாக நேர்காணல் வந்தது.அதில் படத்தின் ஒவ்வொரு கேரக்டர் குறித்தும் சிலாகித்து பேசினார்கள். இப்படி இருக்கும்.. அப்படி இருக்கும் என்று பேசி மெய்சிலிர்க்க வைத்தார்கள்.. ஆனால் படம் உண்மையில் அப்படி இல்லை.. படம் ரஃப் கட் போல் இருக்கிறது.

ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்திருக்கிறார். அவர் தேசிய விருது வாங்கியவர். தப்பாக நினைக்க வேண்டாம். இது ரஃப் கட் போல் உள்ளது. படத்தின் நீள 2.45 மணி நேரம் ஆகும்.எனக்கு கொடுங்கள் நான் 20 நிமிடம் உங்களுக்கு ட்ரிம் செய்து தருகிறேன். படத்தில் வழக்கமாக ஷாட் ஓகே ஆன பின்னர் எக்ஸ்ட்ராவாக நடிப்பார்கள்.. அதை எல்லாம் உள்ளே வைத்துள்ளீர்கள்... குறைந்தது 10 முறையாவது ட்ரிம் செய்த பின்னரே பைனலாக படம் ரெடியாகும். ஆனால் மொதவெர்ஷனை அப்படியே விட்டுள்ளார்கள். கேள்வி கேட்டால் சினிமா ரசனை இல்லை என்பார்கள். நாலு புக் படித்துவிட்டு வர வேண்டும் என்பார்கள்..

இசையை பொறுத்தவரை ஏஆர் ரகுமான் சூப்பராக கொடுத்திருப்பார் என்று நம்பினோம். பாடல்கள் அப்படி இருந்தது. ஆனால் படத்தின் பின்னணி இசையை பொறுத்தவரை அப்படி இல்லை.. எங்கும் படுத்துக்கொண்டே கையை வைத்து அமுக்கிவிட்டாரா என்று கேட்க தோன்றுகிறது.. சீரியஸ் சீனில் மியூசிக்கில் நாம் நடனமாடலாம் என்பது போல் இருக்கிறது. எனக்கு தெரிந்து ஏஆர் ரகுமானே, இது எல்லாம் சீனா என்று நினைத்து செட்ரிக்காக கமெண்ட் அடிப்பது போல் பிஜிஎம் வாசித்துவிட்டதாக நினைக்கிறேன்.. சின்ன சின்ன பசங்க எல்லாம் பிஜிஎம்மில் கதை சொல்கிறார்கள். ஏஆர்ரகுமான் சார் மியூசிக் இது.. என்னய்யா பண்ணிவச்சிருக்கீங்க..

ஐமேக்ஸில் உட்கார்ந்து படம் பார்க்கும் போது தான் நிலைமை புரிகிறது. நான் வேறு சும்மா இல்லாமல், கமல் ஹாசன் சார் படத்திற்கு சப்போர்ட் செய்தேன். தமிழ் மொழியை தூக்கி பிடித்தார். அதற்கு அது சர்ப்போர்ட், சப்போர்ட் தான்... நான் வேறு தெரியாமல் ஐந்து முறை பார்க்கிறேன் என்று கூறிவிட்டேன்.. நான்கு முறை பார்த்தால் பாடி தாங்குமா என்பது தெரியலீங்க... பார்ப்போம்.. படத்தில் வந்து இப்படி பல கட்ட காமெடிகள் விஷயம் இருக்கிறது. இந்த படம் அடிப்படையில் ரைட்டிங்கோட பெய்லியர் தான்.. கதையை சரியாக எழுதவே இல்லை.." இவ்வாறு கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+