பெயரை கேட்டாலே சும்மா அதிருதே.. கமல் ஹாசன் Thug Life வீடியோ பார்த்தீங்களா.. வெடித்த சர்ச்சை
சென்னை: தக் ஃலைப் (Thug Life) என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் நாயக்கர் என்று சாதியை குறிப்பிடும் பெயரை கமல்ஹாசன் வைத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தேவர் மகன் படத்திற்கு பிறகு சாதி பெயரை குறிப்பிடும் பெயர்களை கமல்ஹாசன் வைத்தால் எதிர்ப்புகள் எழுந்து வருவது தொடர் கதையாக உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் "Thug life." இந்தப் படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். நேற்று தக் ஃலைப் படத்தின் அறிமுக வீடியோ வெளியாகியது. அந்த வீடியோவில் கமல்ஹாசனின் பெயர் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று உள்ளது. அதாவது கமல்ஹாசனின் பெயர் தக் ஃலைப் படத்தில் சக்திவேல் நாயக்கர் என்று உள்ளது.

முற்போக்குவாதியான கமல்ஹாசன் சாதிகளை உயர்த்தி படம் எடுப்பது இல்லை. இருந்த போதிலும், தேவர் மகன் படத்தில் சாதிப் பெயர் இருந்தது. அந்த படத்திற்கு பின் கமல்ஹாசன் சாதிப்பெயர் வைத்தோ, அல்லது சாதியை வைத்தோ குறிப்பிட்டு படம் எடுத்தால் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. கமல்ஹாசன் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் சாதியின் பெயரை எந்த படத்திலும் ஹீரோக்களுக்கு வைக்கப்படுவது இல்லை.
அதையும் மீறி சாதிய பெருமையை தூக்கிப்பிடிப்பது போன்ற வசனங்கள், காட்சிகள் இருந்தால் அவற்றை நீக்கினால் தான் படம் வெளியாகும் என்ற நிலை இப்போது உள்ளது. கமல்ஹாசன் விரும்மாண்டி படம் எடுத்த போது அதற்கு சண்டியரே என்று தான் முதலில் பெயர் வைத்தார். அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த காரணத்தால் விரும்மாண்டி என்று பெயரை மாற்றினார். அதன் முழு பெயர் அனைவருக்கும் தெரியும். ஆனால் அதில் சாதிப்பெயர் வைக்கப்படவில்லை.
தேவரின மக்களை சீர்திருத்த அன்று சக்திவேல் தேவர். நாயக்கர் மக்களை நல்வழிப்படுத்த இன்று சக்திவேல் நாயக்கர்.
— Nelson Xavier (@nelsonvijay08) November 6, 2023
அந்த ரங்கராஜ ...?
இவங்களை உண்மையாவே யாரு திருத்தி வழிநடத்துறாங்கன்னு நாட்டுக்கு சொல்லணும்ல.
ஆண்டாண்டு காலமா ஒடுக்கப்பட்டு வர்ற மக்களோட கதைய படமா எடுத்துட்ருக்க இப்போதைய…
தேவர்மகன் படத்தில் சக்தி வேல் தேவராக கமல் ஹாசன் நடித்திருந்தார். இந்நிலையில் தக் ஃலைப் படத்தில் சக்திவேல் நாயக்கராக நடித்துள்ளார். சக்தி வேலுக்கு பின்னர் உள்ள நாயக்கர் என்று சாதிய பெயருக்கு தான் எதிர்ப்பு எழுந்தள்ளது. பலரும் கமல் ஹாசனை விமர்சித்து கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மூத்த பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர் வெளியிட்டுள்ள பதிவில்,"தேவரின மக்களை சீர்திருத்த அன்று சக்திவேல் தேவர். நாயக்கர் மக்களை நல்வழிப்படுத்த இன்று சக்திவேல் நாயக்கர். அந்த ரங்கராஜ ...? இவங்களை உண்மையாவே யாரு திருத்தி வழி நடத்துறாங்கன்னு நாட்டுக்கு சொல்லணும்ல. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வர்ற மக்களோட கதைய படமா எடுத்துட்ருக்க இப்போதைய இளம் இயக்குநர்கள் ஒருத்தர் கூட அம்மக்களுக்கான நீதிக்காக கூட சாதி பேரை படத்துல வைக்கல. நீங்க சொன்ன மாதிரி புள்ள குட்டிங்க படிச்சி மேல வந்துட்டாங்க சார்... ... ..." என்று கூறியுள்ளார்.
முத்து என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், சாதி தான் என் முதல் எதிரி என்று நேற்று தான் கூறினார். இன்று சக்திவேல் நாயக்கர் என்று படத்தில் கேரக்டருக்கு பெயர் வைத்துள்ளார். விவின் பிரசாத் என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், சக்திவேல் நாயக்கர் To சக்திவேல் தேவர் To சக்திவேல் கவுண்டர் To சக்திவேல் நாயக்கர் என்று சாதிப்பெயர்கள் தொடர்பாக கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications