தட்டுத் தடுமாறும் தக் லைஃப்.. கமல்ஹாசன் காலை வாரிய நெட்ப்ளிக்ஸ்! அவசர அவசரமாக எடுத்த அதிரடி முடிவு!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்திருந்த தக் லைஃப் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்த நிலையில் எதிர்மறை விமர்சனங்களால் படத்தின் வசூல் தட்டு தடுமாறி வரும் நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்திருக்கிறது. படத்தை முன்னதாகவே வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இல்லை என்றால் பணத்தை தர வேண்டும் என கமலுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாயகன், தளபதி, பம்பாய் உள்ளிட்ட படங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட இயக்குனர் மணிரத்னம். குறிப்பாக கமலஹாசன் உடன் முதல் முறையாக அவர் இணைந்து பணியாற்றிய நாயகன் திரைப்படம் தற்போது வரை பலரது ஃபேவரிட் ஆக இருக்கிறது.
இந்நிலையில், தக் லைஃப் திரைப்படத்தின் மூலம் கிட்டத்தட்ட 37 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைகிறது என்று அறிவிப்பே கமல், மணிரத்னம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. கூடுதலாக சிம்புவும் முதல் முறையாக கமலஹாசன் உடன் இணைந்து நடிக்கிறார் என்ற தகவல் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தொடர்ந்து திரிஷா,அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமும் படத்தில் இணைந்த நிலையில், ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற ஜிங்குச்சா, முத்த மழை உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து டீசர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியானது. வழக்கமான மணிரத்தினம் படம் போல் இருப்பதாக சில ரசிகர்கள் கூறினாலும், பெரும்பாலானோர் படம் சரியில்லை என நெகட்டிவ் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இதுவரை சமூக வலைதளங்களில் ஒரு விமர்சனம் கூட தக் லைஃப் படத்திற்கு ஆதரவாக இல்லை. அந்த அளவுக்கு படத்தை அடித்து துவைத்து எடுத்து வருகின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலையே இன்னும் தாண்டவில்லை என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாகவே அதன் ஓடிபி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி ரூபாய்க்கு பெற்றிருந்தது.
மேலும் சேட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி 50 கோடி ரூபாய்க்கு விஜய் டிவி பெற்றதாக தகவல் வெளியானது. இதன் மூலம் படத்தின் பட்ஜெட்டை ஓடிடி மட்டும் சேட்டிலைட் ரைட்ஸ் விற்பனை மூலமே தயாரிப்பு தரப்பு சரி செய்து விட்டது. இந்த நிலையில் தற்போது ஓடிடி உரிமையை பெற்ற நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கமல் தரப்புக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. படம் வெளியான போது 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் என கமலஹாசன் கூறியிருந்தார்.
இந்நிலையில், தியேட்டர்களில் ஆள் இல்லாத நிலையில் படத்தை முன்னதாகவே வெளியிட நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. அதாவது ஜூலை முதல் வாரத்திலேயே படத்தை வெளியிட நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. தற்போது தியேட்டர்கள் ரசிகர்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலையில், ஓடிடியில் வெளியானால் மிச்ச மீதி இருக்கும் வசூலும் பாதிக்கப்படும் என்பதால் படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என கமல் தரப்பு கேட்டு வருகிறது. ஆனால் படத்தை உடனடியாக வெளியிட வேண்டும் இல்லை என்றால், ஏற்கனவே கொடுத்த பணத்தில் 30 கோடி ரூபாயை தர வேண்டும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் நெருக்கடி கொடுப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications