Thug Life Review: தக் லைஃப் ரிவ்யூ.. படம் எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்வது என்ன? முழு விமர்சனம்
சென்னை: மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாகி சிறப்பான ரிவ்யூக்களை பெற்று வருகிறது.
'நாயகன்' படத்திற்கு பிறகு 38 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில் 9 மணிக்கு படம் வெளியாகும். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை மற்ற மாநிலங்களில் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' படம் வெளியாகி உள்ளது. 'தக் லைஃப்' படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொடுத்த ரிவியூக்கள் இங்கே பட்டியலிடப்பட்டு உள்ளன.
தக் லைஃப் ரிவ்யூ
ஆந்திர ரசிகர்கள் பலர் படம் சிறப்பாக உள்ளது. இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இன்டர்வலுக்கு பின் படம் வேகம் எடுக்கிறது. கிளைமேக்ஸ் சிறப்பாக உள்ளது என்றுள்ளனர்.
அதே கமலின் லெஜண்ட்ரி நடிப்பு உள்ளது. காட்சிகள் யூகிக்க கூடிய அளவிற்கு உள்ளது. சில இடங்களில் கேள்வி கேட்கும் வகையில் இருந்தாலும் படம் மாஸ் என்டர்டெயினர் படம். கடைசி வரை வேகமாக செல்கிறது. படத்தின் சில காட்சிகள் ஓகே ரகம். ஆனாலும் கண்டிப்பாக படம் மாஸ் என்டர்டெயினர். முக்கியமாக தமிழில் பெரிய கமர்ஷியல் ஹிட் படமாக இருக்கும். இண்டர்வல் சிறப்பாக உள்ளது.
கேரளா ரசிகர்கள் சிலர்.. இந்த படம் பிளாக்பஸ்டர். இதுதான் படம். நாங்கள் தீவிர ரசிகர்கள். எங்களுக்கு படம் பிடித்துள்ளது. எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர். விக்ரமிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் கமலுக்காக் படம் எடுத்துள்ளனர் என்றுள்ளனர்.
அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் நிச்சயமாக திருப்திப்படுத்தும் ஒரு மேட்னஸ் மாஸ் என்டர்டெய்னர். எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர், என்று கமெண்ட் செய்துள்ளனர்.
கணிக்கக்கூடிய, கடந்து செல்லக்கூடிய மற்றும் வழக்கமான கதை. புதிதாக எதுவும் வழங்கப்படவில்லை. கேமரா வேலை சிறப்பாக உள்ளது, சில பகுதி பின்னணி இசையும் நன்றாக உள்ளது. கமல்ஹாசனுக்கும் த்ரிஷாவுக்கும் இடையிலான நெருக்கமான காட்சிகள் தேவையற்றவை.
கதை இதுவரை சில இடங்களில் சிறப்பாக செயல்படுகிறது, குறிப்பாக ஆரம்ப பகுதிகளில். கதைக்களம் சில சூழ்ச்சிகளைக் கொண்டுள்ளது, இது கதையை ஓரளவு ஈர்க்க வைக்கிறது. இருப்பினும், படத்தின் கணிக்கக்கூடிய தன்மை மற்றும் மெதுவான வேகம் இந்த படத்தை ரசிக்க விடாமல் தடுக்கிறது. சிம்பு நடிக்கும் காட்சிகள்தான் சிறப்பாக இருக்கின்றன.
அவர் வரக்கூடிய காட்சிகள் அதிக வேகமாக இருக்கின்றன. சில இடங்களில் கேள்வி கேட்கும் வகையில் இருந்தாலும் படம் மாஸ் என்டர்டெயினர் படம். இண்டர்வல் திருப்பம் சிறப்பாக உள்ளது. முதல் பாதி மெதுவாக சென்றாலும் இன்டர்வலுக்கு பின் படம் வேகம் எடுக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் இந்த படம் குறித்து ரிவ்யூ செய்துள்ளனர்.
நீங்கள் தக் லைஃப் படத்தை பார்த்துவிட்டீர்களா? அப்போ உங்க ரிவ்யூ என்னன்னு கமெண்டில் சொல்லுங்க!
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications