விவேகம் ஒரு கப்.. இந்தியன் 2 ஒரு கப்.. கடைசி விவசாயி ஒரு கப்.. தக் லைஃப் ரெடி.. Thug Life ரோஸ்ட்
சென்னை: "இந்தியன் 2" படத்தை விட மோசமான ஒரு கமல் படம் இருக்க முடியாது என்று பலரும் நினைத்த நேரத்தில் "இருங்க பாய்" அதைவிட மோசமான படத்தை குக் பண்றேன் பாருங்க என்று என்று "தக் லைஃப்" படத்தை சமைத்து தூக்கிக்கொண்டு வந்திருக்கிறார்கள் மணி அன் கோ திரைப்படைக்குழு. அப்படி இந்த படம் கலாய்க்கும் அளவிற்கு அவ்வளவு மோசமா என்று கேட்டால்.. கலாய்க்க கூட தகுதி இல்லாத படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஒரு நபரை மரணம் விடாமல் துரத்துகிறது.. மரணம் நடக்கும் போதெல்லாம் அதில் இருந்து மீண்டு வருகிறார் என்று இந்த படத்தின் ஒன் லைனை சொல்லலாம். இல்லை என்றால்.. ஒரு அப்பாவிற்கு இரண்டு குழந்தைகள். அப்பா இறக்க .. ஒரு குழந்தை ரவுடியிடம் வளருகிறது .. ஒன்று போலீசிடம் வளருகிறது. இரண்டு பேரும் இறுதியில் சந்திக்கிறார்கள்.. அவர்கள் வாழ்க்கை எப்படி போனது என்பது இரண்டாவது ஒன் லைன் என்று சொல்லலாம்.

இரண்டுமே கொஞ்சம் பழசாக இருந்தாலும் நல்ல கதைதான்.. ஆனால் மணி சார் இந்த லைனைதான் "அம்மி கல்லை கொத்த தெரியாமல் கொத்தி" வைத்து இருக்கிறார். படத்தின் தொடக்கம் என்னவோ பிளாக் அண்ட் வொயிட்டில் கமலின் டி ஏஜிங் லுக்கோடு போலீஸ் துப்பாக்கி சூட்டோடு.. தொடங்கிய போது நன்றாகவே இருந்தது. அந்த துப்பாக்கி சூட்டோடு சூடாக படத்தை அங்கேயே முடித்து இருந்தால்.. மணி ரத்னம் எடுத்த நல்ல ஷார்ட் பிலிம் படமாக வந்திருக்கும்.. நாளைய இயக்குனரிலும் சிறப்பாக ஓடி இருக்கும்.
ஆனால் மணி.. இன்னும் 3 மணி நேரம் கதை இருக்கு என்று சொல்லி எடுத்த மொத்த படமும் SCAM. இந்தியாவில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத SCAM. ஊழலுக்கு எதிராக கட்சி தொடங்கிய கமலை வைத்தே செய்த SCAMதான் இந்த படம். கமல் சார் நீங்க கன்னடர்களிடம் மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம்.. இந்த படத்தை எடுத்ததற்கு எங்களிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று ரசிகர்களே சொல்லும் அளவிற்குத்தான் படம் இருந்தது.
இந்த படத்தில் ரப்பர் பந்து ஹீரோயின் சஞ்சனா எதற்கு என்ற கேள்வி படம் பார்க்கும் போது உங்களுக்கு வரலாம்.
அப்போது வடிவுக்கரசி வந்து நிற்பதை பார்க்க.. அட இவர் எதற்கு என்று உங்களுக்கு தோன்றும். அந்த நினைப்பு முடிவதற்குள் ஜோஜு ஜார்ஜ் வருவார்.. அட இவர் எதற்கு பாஸ் என்று கேட்டு முடிக்கும் முன் அக்கா திரிஷா வந்து.. சுகர் பேபி சுகர் சுகர் பேபி என்று நமக்கு சுகரை ஏற்றுவார்..
ஆமால்ல இவர் எதுக்கு என்று கேட்கும் முன்.. "குறுக்கே இந்த கவுசிக் வந்தால்.." என்று அசோக் செல்வன் வந்து நிற்பார்.. அவருடன் சேத்தனும் வந்து நிற்பார்.. அட ஆமா இவங்க எதுக்கு என்று கேட்டு முடிக்கும் முன்..
முத்த மழை பாடலை பாடிய தீ - சின்மயி நினைவு வரும் உங்களுக்கு.. அட மேலே சொன்னவர்களாவது படத்தில் வந்தார்கள்.. இவர்கள் பாடிய பாட்டு கூட படத்தில் வரலையே என்று கேட்க தோன்றும்.
இப்படி வராத பாடலுக்கு.. யார் சிறப்பாக பாடியது என்று இன்ஸ்ட்டாவில் பலர் poll நடத்தியதுதான் மிச்சம்.
மேலே சொன்னவர்கள் எல்லாம் இல்லாமல் படம் எடுத்திருந்தாலும்.. படத்தில் எந்த சிக்கலும் வந்திருக்காது.. ஆனால் மணி இவர்களின், கால் சீட் சும்மா இருந்ததால் வாங்கி வைத்துக்கொண்டார் போல.
சரி casting இப்படி என்றால் கதை.. நாயகன் போல தொடங்கி விவேகம் படத்தின் பனிமலை காட்சிகளை உள்ளே இழுத்து.. செக்க சிவந்த வானம் படத்தின் அதே தீமை உள்ளே போட்டு.. இந்தியன் 2 போல கமல் தாத்தா வெளிநாட்டில் குங்கு பூ எல்லாம் காத்துகொண்டு சண்டை போட கடைசியில் எல்லாம் போய் விவசாயம் பண்ண போங்கடா என்று கடைசி விவசாயி பாணியில் முடித்துள்ளனர்.
அதிலும் விவேகம் ஸ்டைலில் கமல் பனி மலையில் உடம்பில் புல்லட் தொங்க கஷ்டப்பட்டு வெளியே வருவதை பார்க்க எங்கே "தலை விடுதலை பாரடா" என்ற பாடல் வந்துவிடுமோ என்று எண்ண தோன்றியது.
அதிலும் இன்டர்வலுக்கு பின்.. சிம்பு இங்கே நான்தான் ரங்கராய சக்திவேல் என்று சொல்லும் நொடி .. ஹப்பா இனி படம் வேகம் எடுக்கும்.. படத்தை மட்டுமல்ல டெல்லியையும் சிம்பு கண்ட்ரோல் எடுப்பார் என்று நினைத்தால்.. சிம்பு திரிஷாவை கண்ட்ரோல் எடுப்பதை பார்க்க பலருக்கும் கடுப்புதான் மிஞ்சும்.
ஒரு குழந்தை காணமால் போனால் போலீசில் சொல்லலாம்.. அநாதை இல்லங்களில் தேடலாம்.. ஏன் பெண்களை கடத்தும் இடங்களில் கூட தேடலாம்.. ஆனால் கமல் 20 வருடத்திற்கு பின் டான்ஸ் கிளப்பில் போய் தேடுவதெல்லாம் கதை என்று நம்பி மணி எடுத்ததை என்னவென்று சொல்வது.
இந்த படத்தில் கொஞ்சம் பார்க்கிற மாதிரி இருந்தது சிம்பு மட்டும்தான். தியேட்டரில் பார்க்க வேண்டாம்.. ஓடிடியில் பாருங்க என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஏனென்றால் ஓடிடியிலும் இதை பார்க்காதீங்க.. நேரம் மிச்சம்!
கடைசியாக மணி சாரிடம் ஒரே ஒரு கேள்வி.. விவசாயம் பண்றப்ப விண்வெளி நாயகா பாடலை வைக்க சொன்ன அந்த புத்திசாலி யார் என்று மட்டும் சொல்லுங்கள்.. நாம solve ஆ போயிடலாம்!












Click it and Unblock the Notifications