ஸ்டாலினை ஸ்டன்னாக்கிய துறைமுகம் காஜா! திமுக இஃப்தார் விழாவில் திடீரென தேம்பி தேம்பி அழுகை!
சென்னை: திமுக தலைமை நிலையச் செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவருமான துறைமுகம் காஜா, ஸ்டாலின் முன்னிலையில் திடீரென தேம்பி தேம்பி அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.

இந்த விழாவை ஒருங்கிணைத்திருந்த துறைமுகம் காஜா, பழைய நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்டி தாம் பேசும் போது கண்ணீர் விட்டு கதறினார்.
அதாவது ஒரு முறை கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பரான தஞ்சை சுல்தான் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த போது கருணாநிதி காரில் ஏறி புறப்பட தயாராகிவிட்டதாகவும், அந்த நேரம் பார்த்து சுல்தான் வந்ததால் அவரை தன்னால் கருணாநிதியை சந்திக்க வைக்க முடியவில்லை எனவும் கூறினார்.
இருப்பினும் கருப்பு பூனை படையிடம் இந்தியில் பேசி அண்ணன் சுல்தானை சந்திக்க விடுங்கள் என தாம் கூறியும் அவர்கள் அதை பொருட்படுத்ததால் கருணாநிதியின் கான்வாய் அண்ணா அறிவாலயத்தில் இருந்து புறப்பட்டு விட்டதாக கூறினார் துறைமுகம் காஜா.
மறுநாள் அண்ணா அறிவாலயத்துக்கு வந்த கருணாநிதி, தஞ்சை சுல்தான் வரும் தகவலை ஏன் முன் கூட்டியே என்னிடம் சொல்லவில்லை என கடிந்துகொண்டதுடன், நாளையிலிருந்து உன்னை அறிவாலயம் பக்கமே பார்க்கக் கூடாது என விரட்டிவிட்டதாக கூறினார்.

இதையடுத்து நேராக தாம் பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு சென்று நடந்த விவரத்தைச் சொல்லி, தலைவர் என்னை வரக் கூடாது என்கிறார் என்ன செய்ய எனக் கேட்டதாகவும், அட போப்பா அவர் கொஞ்ச நேரத்தில் அதை மறந்துவிடுவார் வழக்கம் போல் வருமாறு தன்னிடம் பேராசிரியர் அன்பழகன் கூறியதாகவும் கூறினார்.
அன்பழகன் பேச்சைக் கேட்டு அடுத்த நாள் அண்ணா அறிவாலயத்துக்கு சென்ற போது, காரில் இருந்த இறங்கிய கருணாநிதி, இவன் எதுக்கு இங்கு நிற்கிறான், இவனை தான் வரக்கூடாது என்று சொன்னனே என தன்னிடம் கடிந்ததால் அறிவாலயம் பின்புறம் உள்ள நூலகத்துக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

மீண்டும் அடுத்த நாள் மாலை அண்ணா அறிவாலயம் சென்ற தாம் முகப்பு வாசலில் நிற்காமல் பின்புறம் உள்ள நூலகம் பக்கம் நின்றதாக தெரிவித்தார். அப்போது எங்கய்யா அவன் என தன்னைப் பற்றி சண்முகநாதனிடம் கருணாநிதி கேட்டதோடு வரச் சொல்லுமாறும் கூறியதைக் கேட்ட தாம் அழுதுவிட்டதாக கூறிக்கொண்டே மேடையில் தேம்பி தேம்பி அழுதார் துறைமுகம் காஜா.
ஸ்டாலினை ஸ்டன்னாக்கும் வகையில் சின்னப் பிள்ளையை போல் துறைமுகம் காஜா அழுவதை பார்த்த பலரும் ஒரு நிமிடம் திகைத்து போய்விட்டனர்.
தன்னை பொறுத்தவரை அண்ணா அறிவாலயம் தான் தனக்கு எல்லாம் என்றும் பக்ரீத், ரம்ஜான் போன்ற நாட்களில் கூட அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சென்றால் தான் தனக்கு தூக்கம் வரும் எனக் கூறி தனது விசுவாசத்தை வெளிப்படுத்தினார் துறைமுகம் காஜா.
-
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்!












Click it and Unblock the Notifications