தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? ரயிலில் டிக்கெட் புக்கிங் தொடங்கியது.. உடனே செக் பண்ணுங்க
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் சென்று கொண்டாட சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் வசிக்கும் மக்கள் விரும்புவார்கள். இதனால் தீபாவளிக்கு முந்தைய நாட்களில் ரயில், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். நெரிசலை தவிர்க்க பலரும் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளே புக்கிங்க் செய்துவிடுவார்கள். அந்த வகையில், தீபாவளி பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.
பண்டிகை, விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளர்கள். அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு கிளம்பிவிடுவார்கள்.

தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் பேருந்து, ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். ஏதோ ஒரு திருவிழா கூட்டம் போல ரயில் நிலையங்களிலும் எந்த பக்கம் பார்த்தாலும் பயணிகள் தென்படுவார்கள். கடைசி கட்டத்தில் ரயில்களிலும் பேருந்துகளிலும் இடம் கிடைக்காமல் பயணிகள் அல்லாடுவதையும் பார்க்க முடியும். பல பயணிகள் முன் கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் புக் செய்து விடுவார்கள்.
ரயில்களை பொறுத்தவரை 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வியாழக்கிழமை ஆகும். தீபாவளிக்கு முந்தைய நாட்களில் மக்கள் வழக்கமாக சொந்த ஊர் செல்ல திட்டமிடுவார்கள்.
அதாவது, அக்டோபர் 28, 29, 30 ஆகிய தேதிகளில் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணிகள் பலரும் பிளன் செய்வார்கள். அந்த வகையில், அக்டோபர் 28 ஆம் தேதிக்கான ( திங்கள்) முன்பதிவு இன்று தொடங்கியது. இந்த முன்பதிவு தொடங்கியதில் இருந்தே டிக்கெட்டுகள் வேகமாக விற்று தீர்ந்து வருகின்றன. வழக்கமாக பயணிகள் கூட்டம் அலைமோதும் தென் மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்க்களில் விற்று தீர்ந்து விட்டது.
அக்டோபர் 29 ஆம் தேதி பயணிக்க விரும்புபவர்கள் நாளை புக்கிங் செய்து கொள்ளலாம். 30 -ம் தேதி பயணம் செய்ய விரும்புவர்கள் நாளை மறுநாளும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், "பெரும்பாலான பயணிகள் தற்போது ஐஆர் சிடிசி இணையதளம் மூலமாகவே முன்பதிவு செய்கிறார்கள்.
அதாவது 80 சதவீத டிக்கெட்டுகள் இணயதளம் மூலமே புக்கிங்க் ஆகின்றன. இதனால், இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது, கூடுதல் பெட்டிகளை இணைப்பது ஆகியவை குறித்து ரயில்வே மண்டலங்கள் முடிவு செய்யும். சிற்பபு ரயில்கள் குறித்த அறிவ்ப்பு உரிய நேரத்தில் இயக்கப்படும்" என்றார்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications