சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேட்ட சீட்டும் கிடைக்கலை.. தொகுதியும் தரலை.. இப்ப இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு.. பரிதாப வைகோ

வைகோவின் பட்டத்தை கனிமொழிக்கு சூட்டினார் திமுக தலைவர் முக ஸ்டாலின்

Google Oneindia Tamil News

Recommended Video

    வைகோவுக்கு இருந்த பட்ட பெயரும் பறி போயிருச்சு- வீடியோ

    சென்னை: போச்சு.. வைகோவுக்கு திமுகவில்.. கேட்ட சீட்டும் கிடைக்கவில்லை.. தொகுதியும் கிடைக்கவில்லை.. இப்போ இருக்கிற பட்ட பெயரும் கனிமொழிக்கு தாரை வார்க்கப்பட்டுவிட்டது!

    40 வருஷத்துக்கு மேல் அரசியல் அனுபவம் மிக்க பழுத்த அரசியல்வாதி வைகோ ஆவார். மிகச்சிறந்த ஞானம் உடையவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றவர்.

    22 ஆண்டுகளுக்கு முன்பு எம்பியாக இருந்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்தவர். ராஜ்யசபா, லோக்சபா என இந்த இரண்டிலுமே வைகோவின் ஆங்கில உரையை கேட்க நிறைய எம்பிக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.

    பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி!பிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி!

    காரசாரம்

    காரசாரம்

    இதில் எந்தவித கட்சி பாகுபாடும் இருக்காது. பாயிண்ட் பாயிண்ட்டாக பேசி காரசார விவாதத்தில் ஈடுபடுவார் வைகோ. அதனால்தான் வைகோவை அன்று 'டைகர் ஆப் பார்லிமென்ட்' என கட்சி தலைவர்கள் அழைத்தார்கள்.

    நிசப்தம்

    நிசப்தம்

    பின்னர் வைகோவின் அசுர வளர்ச்சி, மகன் மீதான கருணாநிதி பாசம் போன்றவைகள் காரணங்களாக நிற்க, வைகோ கட்சியை விட்டு வெளியேறும் நிலை வந்தது. காலத்தின் சூழல், திரும்பவும் திமுகவுடன் வைகோ கரம் கோர்க்கும் நிலை ஏற்பட்டது. சீட் பேரம் எப்போது ஆரம்பமானதோ அப்போதே வைகோ பாதி அப்செட் என தெரிகிறது. ஒரே ஒரு சீட் ஒதுக்கப்பட வைகோவின் சத்தம் குறைய ஆரம்பித்துவிட்டது!

    கர்ஜனை

    கர்ஜனை

    ஆனால் ராஜ்ய சபா சீட் தருவதாக திமுக தரப்பில் உறுதி தரப்பட்டதாக சொல்லப்பட்டது. எனவே 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வைகோ எம்பியாக போகவும் வாய்ப்புள்ளது. அதுவும் ஸ்டாலினால் இது நடக்க போகிறது. வைகோவின் கர்ஜனை இல்லாமல் தமிழக பிரச்சாரத்தில் ஒரு நிசப்தம் இழையோடியே வருகிறது!

    கனிமொழி

    கனிமொழி

    இருந்தாலும் வைகோவின் பார்லிமென்ட் ஆப் டைகர் என்ற பட்டப்பெயரை தன் தங்கைக்கு சூட்டிவிட்டார் முக ஸ்டாலின்! ஒரு பக்கம் வைகோவையும் ராஜ்ய சபாவுக்கு அனுப்ப திமுக முடிவு செய்கிறது. மற்றொரு பக்கம் வைகோ பட்டத்தையும் எடுத்து கனிமொழிக்கு கொடுத்துவிட்டது. அப்படியானால் இனி யார்தான் பார்லிமென்ட் ஆப் டைகர் ஆக இருப்பார்கள்?

    English summary
    DMK Leader MK Stalin campaigning from Thoothukudi for supporting Kanimozhi and called Tiger of Parliament
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X