Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயில் ரத்தம்.. "நீங்க எல்லோரும்தான் என் சாவுக்கு காரணம்".. பதற வைத்த டிக்டாக் பெண்கள்!

டிக்டாக் வெளியிட்ட பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரத்தக்கறை படிந்த துணியுடன்.. வாயில் இருந்தும் ஒழுகும் ரத்தத்துடன்.. "நீங்க எல்லாரும்தான் என் சாவுக்கு காரணம்.. " என்று தற்கொலை முயற்சியில் ஈடுபடும் பெண்ணின் வீடியோவை பார்த்ததும் பதறிவிட்டனர் நெட்டிசன்கள்!

Recommended Video

    'நீங்க எல்லோரும்தான் என் சாவுக்கு காரணம்'.. மீண்டும் பதற வைத்த டிக்டாக் பெண்கள்! - வீடியோ

    இப்போது கூட இந்த பெண்ணின் பெயர் தெரியவல்லை.. கடந்த வாரம் ஒரு வாரம் முழுவதும் இந்த் பெண்ணின் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாவில் வைரலானது.

    ஒரு யூ-டியூப் சேனலில் பேட்டி எடுக்கும்போது இந்த காதல் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு இந்த பெண் சொல்லும்போது, "இப்பதான் லவ் பண்ணி கல்யாணம் முடிச்சேன்... ஆனால் அவர் இன்னொருத்திகூட போயிட்டாரு. நான் லவ் பண்ணி சும்மா இப்படி நின்னுட்டு இருக்கேன்.. கல்யாணமும் முடிச்சி.. ஆனா வெளியில பார்த்தா தெரியாது, உள்ளுக்குள்ள நான் நிறைய கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்.

    விலகிட்டேன்

    விலகிட்டேன்

    ஆனால் நான் இருக்கேனா இல்லையான்னு கூட கேட்கிறது இல்லை.. என்னை திடீர்னு வேண்டாம்னு சொல்லிட்டாரு... நல்லா இருந்தா சரிதான்.. நான் மனசார லவ் பண்ணிட்டேன்.. அவர் யார்கூட இருந்தாலும் நல்லா இருன்னு சொல்லிட்டு விலகிட்டேன்.. அது ஒன்னு போதும் எனக்கு.. அவரை நல்லா பார்த்துக்கிட்டா போதும் யாருன்னாலும்!!" என்று தெரிவித்திருந்தார்.

    டிக்டாக்

    டிக்டாக்

    இந்த பெண்ணின் பேச்சில் வெகுளித்தனம் நிறையவே வெளிப்பட்டது.. சிரித்து கொண்டே தன் வலிகளை இப்படி பகிர்ந்து கொண்டார்.. அதுமட்டுமல்ல, தோல்வி, இழப்பைகூட பாசிட்டிவ்வாகவே எதிர்கொண்டதால் ஏராளமானோர் இவருடைய இந்த டிக்டாக் வீடியோவை ஷேர் செய்தனர்... ஆதரவு கமெண்ட்களும் குவிந்தன. அளவுக்கு மீறி இந்த பெண் பரிதாபத்தை பெற்றுவிட்டதால், இவர் யார் என தேடும் முயற்சியில் சோஷியல் மீடியா நபர்கள் இறங்கினர்..

    பதிவுகள்

    பதிவுகள்

    அப்போதுதான் இவரது டிக்டாக் வீடியோக்கள் கண்ணில் பட்டன. சினிமா பாட்டுக்களுக்கு வாயசைத்து, நிறைய வீடியோக்களை பதிவிட்டுள்ளார். "வந்தவனும் சரியில்லை.. வாய்ச்சவனும் சரியில்லை.. ஒருத்தனையும் நம்ப முடியல.. என்று இவர் சிரித்தபடியே வாயசைத்து பாடுகிறார்.. இவரது எல்லா டிக்டாக் வீடியோவிலும் பக்கத்திலேயே மற்றொரு பெண் உள்ளார்.. இவர் வசனம் பேசினால், அவர் மண்டையை ஆட்டி, முகபாவனைகளை செய்கிறார்.இதையெல்லாம் பார்த்த சிலர், காதல் தோல்வி அடைந்த பெண்ணை திட்ட ஆரம்பித்தனர்.

    கமெண்ட்கள்

    கமெண்ட்கள்

    "ஏம்மா இப்படி இருந்தா யாருதான் விட்டுட்டு போக மாட்டான்" என்றும் "இப்படி ஆட்டம் போட்டால் ஓடிடாமல் என்ன செய்வாங்க" என்றும் கமெண்ட்களை எதிர்மறையாக பதிவிட்டனர். எனினும், தன் சோகத்தை மறைக்க, அல்லது துக்கத்தில் இருந்து மீள்வதற்காககூட இந்த பெண் டிக்டாக் வீடியோ செய்திருக்கலாம்.. அது அவரது உரிமையும் கூட.. டிக்டாக் வீடியோவை வைத்து ஒட்டுமொத்தமாக ஒருவரின் குணநலன்களை முடிவு செய்துவிட கூடாது.. என்று நாம்கூட கருத்து தெரிவித்திருந்தோம்.. ஆனால் திடீரென அந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு விட்டதாக செய்திகள் பரபரப்பாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

    தங்கை

    தங்கை

    இதற்கு காரணம், அப்பெண் டிக்டாக்கில் வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற வீடியோ பகிரப்பட்டதாக சொல்லப்படுகிறது.. அந்த வீடியோவை பார்த்து கடுப்பான அவரது ஃபாலோயர்ஸ் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்... அவருடன் எல்லா டிக்டாக் வீடியோவிலும் இருந்தது, அந்த பெண்ணின் தங்கையாம்... நேற்றுமுன்தினம் இரவு நடுராத்திரி.. ரத்தக்கறை படிந்த துணியுடன்.. வாயில் இருந்து ரத்தம் வழிய... வீடியோ ஒன்றில் பேசவும் பார்த்து பதறிவிட்டனர்.

    கிண்டல்

    கிண்டல்

    அந்த வீடியோவில், "மன உளைச்சலில் இருக்கிறேன்.. அதனால் நானும் என் தங்கச்சியும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்ள போகிறோம்.. எங்க சாவுக்கு காரணம் நீங்க எல்லாரும்தான்.. என்கூட வீடியோவில் இருந்தது என் தங்கச்சிதான்.. அவளையும் கிண்டல் பண்ணி காயப்படுத்திட்டீங்க.. அவ வாழ்க்கையும் இனி என்னாகும்?" என்று கூறி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி விமர்சனம் செய்த நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

    என்ன ஆனார்கள்?

    என்ன ஆனார்கள்?

    இதற்கு பிறகு இவர்கள் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.. உண்மையிலேயே நெட்டிசன்கள் பார்த்த வீடியோ என்ன என்று தெரியவில்லை.. ஆனால் டிக்டாக் வீடியோவை பார்த்து கமெண்ட் செய்ததால், இவர்கள் அந்த மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. மேலும் குடும்ப உறுப்பினர்களாலும் காயப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.. அவர்களுக்கு என்ன ஆச்சு? யாராவது காப்பாற்றி முதலுதவி செய்தார்களா என்றுகூட தெரியவில்லை.. இவர்கள் உயிர்பிழைக்க வேண்டும் என்று மட்டும் மனம் நமக்கு பதறுகிறது.

    ஆனால் ஒன்று.. மது மட்டுமல்ல... டிக்டாக்கூட மெல்ல கொல்லும் ஒரு நோய்தான்.. வீடியோ பதிவிடுபவர்கள் மட்டுமல்ல.. உயிர்களை காவு வாங்கும் அளவுக்கு கமெண்ட் போடுபவர்களுக்கும் இது பொருந்தும்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+