Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படுக்கைக்கு கூப்பிட்டாங்க.. போனேன்.. எல்லாம் முடிஞ்ச பிறகு ஏமாத்திட்டாங்க.. அதிர வைத்த இலக்கியா!

டிக்டாக் இலக்கியா அதிர வைக்கும் பேட்டி ஒன்றை தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படவாய்ப்புக்காக படுக்கைக்கு கூப்பிட்டாங்க.. போனேன் என்று ஓபனாகவே சொல்லி அதிர வைத்துள்ளார் டிக்டாக் இலக்கியா!

Recommended Video

    அது நான் கிடையாது... கொந்தளித்த டிக்டாக் புகழ் இலக்கியா

    இந்த டிக்டாக் ஆப் வேண்டவே வேண்டாம் என்று கோர்ட் பலமுறை சொல்லியும் யாரும் கேட்கவில்லை.. இந்த ஆப் திறமைகளை வெளிப்படுத்த உதவக்கூடியது என்று சொல்லி வாதாடினர்.. அதற்கு பிறகு சில நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி வழங்கியது!

    ஆனால் ஏன்தான் அனுமதி வழங்கியதோ என்றே கேட்க தோன்றுகிறது.. உண்மையிலேயே நாலு சுவற்றுக்குள் அடைந்திருக்கும் பெண்களுக்கு ஒரு வடிகாலாக, உள்ளுக்குள் பொதிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு கருவியா டிக்டாக் இருப்பதை மறுக்க முடியாது.. நடிகைகளை போலவே நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என ஆடல், பாடல், நடிப்பு என பின்னி எடுக்கிறார்கள்.

    இலக்கியா

    இலக்கியா

    எனினும் ஒருசிலரிடம் இந்த டிக்டாக் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது.. அடுத்தவர்களையும் சீரழித்து கொண்டிருக்கிறது.. ஆபாச டிக்டா என்று தனியாகவே உள்ளது.. இளம்பெண்கள் தங்களின் எல்லைமீறின கவர்ச்சியில் புரண்டு நெளிந்து வீடியோக்களை பதிவிடுகிறார்கள்.. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இலக்கியா!

    எதிர்ப்பு - அட்வைஸ்

    எதிர்ப்பு - அட்வைஸ்

    பெரும்பாலும் டபுள் மீனிங் வீடியோதான்.. அரைகுறை ஆடை, ஆபாச அசைவுகளுடன் வீடியோ பதிவிடுகிறார்.. இந்த வீடியோக்களுக்கு பல இளசுகள் அடிமையாக உள்ளனர்.. வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.. ஆனால் மேலும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறவும் இலக்கியாவுக்கு அட்வைசும் செய்துள்ளனர்.

    சின்ன குழந்தைகள்

    சின்ன குழந்தைகள்

    இந்த சமயத்தில்தான் போலி ஐடி உருவாக்கி தன் பெயரில் பணத்தை பறித்துவிட்டதாக இலக்கியா போலீசில் புகார் கூறினார்.... அப்போது செய்தியாளர்களிடம் பேசும்போது, "என்னை தப்பாகூட நினைக்கட்டும், ஆனா பணம் பறிப்பதாக சொல்கிறார்கள், அதான் தாங்க முடியவில்லை" என்றார். அப்போது ஒருவர், சின்ன குழந்தைங்க எல்லாம் டிக் டாக் ஆப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் நீங்கள் இப்படி ஆபாசமாக பதிவு போடறீங்களே? என்று கேள்வி எழுப்பினார்.. அதற்கு அவர், "குழந்தைங்க கிட்ட ஏன் போனை தர்றீங்க" என்று எதிர்கேள்வி கேட்டு அதிர வைத்தார்.

    அட்ஜஸ்ட்மென்ட்

    அட்ஜஸ்ட்மென்ட்

    இந்த சமயத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு இலக்கியா பேட்டி அளித்துள்ளார்.. அதில், "படவாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்தீர்களா" என்று கேட்டனர்.. அதற்கு "ஆமாம்.. பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொண்டேன்... ஆனால் அந்த டைரக்டர் சான்ஸே தரவில்லை. அட்ஜஸ்ட்மென்ட் இருந்தால்தான் படவாய்ப்பு தருவேன்னு சொல்லுவாங்க.. என்கூட இருந்தால்தான் வாய்ப்புன்னு சொல்லுவாங்க.. படம் பண்ண போறோம்-ன்ற ஆசையில அவங்ககூட இருந்துட்டு வர்றோம்.. போறோம்.

    வாய்ப்பு மறுப்பு

    வாய்ப்பு மறுப்பு

    ஆனா போன் பண்ணி கூப்பிடவே மாட்டாங்க.. என் நம்பரைகூட பிளாக் லிஸ்ட்டில் போட்டுடுவாங்க... அந்த டைரக்டர் பெயர்கூட பொய்யானதாக இருக்கும்.. திரைத்துறையில் இந்த விஷயங்கள் நடக்கின்றன... இது எனக்கு நடந்த ஒன்னு.. என்றார். "அவங்க படுக்கைக்கு கூப்பிட்டா நீங்க ஏன் போறீங்க? புகழ்தான் காரணமா? என்று கேள்வி கேட்கப்படுகிறது.

    ஏமாத்த கூடாது

    ஏமாத்த கூடாது

    அதற்கு இலக்கியா, "சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கவும், அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம் என்றுதான் எனக்கு தோணுச்சு.. அதனாலதான் அப்படி செய்தேன்.. " என்று சொல்லி மறுபடியும் அதிர வைத்துள்ளார். தொடர்ந்து பேசும்போது, "இப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்துட்டு பொண்ணுங்களுக்கு படவாய்ப்பு தந்தால் நல்லா இருக்கும்.. ஒருவேளை அந்த பொண்ணு அட்ஜஸ்ட் பண்ணிக்க வந்தாலும், அவளை யூஸ் பண்ணிட்டு ஏமாத்திட வேணாம்" என்று ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+