இதுதான் கடைசி நொடி.. அந்த இளைஞனுக்கு அது சத்தியமாக தெரியாது.. திருந்துங்கப்பா புள்ளைங்களா!
டிக் டாக் செய்த இளைஞர், அந்தர் பல்டி அடித்து மரணமடைந்துள்ளார்
Recommended Video
சென்னை: இதுதான் கடைசி நொடி.. இது அந்த இளைஞனுக்கோ.. சுற்றி நின்ற இளைஞர்களுக்கோ சத்தியமாக தெரியாது... அப்படியே பின்பக்கமாக அந்தர் பல்டி அடித்து கீழே விழுந்ததுமே.. உயிர் போய்விட்டது இளைஞனுக்கு!
டிக் டாக் விபரீதங்களை சொல்லி மாள முடிவதில்லை.. எவ்வளவு உயிரை காவு கொடுத்தாலும், இன்னமும், அதன் ஆபத்தின்பிடியில்தான் இளைஞர்கள் சிக்கி உள்ளனர்.. அதன் அசம்பாவிதத்தின் வசம் விழுந்து கிடக்கிறார்கள்.

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ஒரு இளைஞரும் உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு ''புள்ளீங்கோ'' என்ற பாடல் மிகவும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த பாட்டுக்காகவே புள்ளீங்கோ என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி பலரும் தங்களுக்கு தெரிந்த வித்தைகளை சாகசங்களாக காட்டி வருகின்றனர். அப்படித்தான் ஒரு இளைஞரும் பலியாகி உள்ளார்.
இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி உள்ளது. தெருவில் பைக் நிற்கிறது. அந்த பைக்கில் பின்னாடி ஏறி நின்று கொள்கிறார். இதை சுற்றி இருந்த நண்பர்கள் இருக்கிறார்கள். லுங்கியை கட்டி உள்ள அந்த இளைஞர், பைக் மேல ஏறி.. "எங்க புள்ளிங்கோ எல்லாம் பயங்கரம்" என்று வாயசைக்கிறார்.
அப்படியே பின்பக்கமாக பல்டி அடிக்க முயற்சி செய்தார். ஆனால் அவரது தலை எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் தலையில் பலமாக மோதியது.. இதை பார்த்து நண்பர்கள் பதறிபோய் ஓடிவந்து அவரை எழுப்பினார். பேச்சு மூச்சே இல்லை.. அசைவில்லை.. தரையில் தலை பட்ட உடனேயே அப்படியே உயிர் போய்விட்டது. இந்த வீடியோ இப்போது வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications