ஐயோ! லாரி வருது! கைய விட்ராதீங்க தம்பி! டிடிஎஃப் வாசனிடம் கதறும் ஜி.பி.முத்து.. டிரென்டாகும் வீடியோ
சென்னை: பிரபல யூடியூபர் ஜிபி முத்துவை தனது சூப்பர் பாஸ்ட் பைக்கின் பின் இருக்கையில் அமர வைத்து டிடிஎஃப் வாசன் பயத்தை காட்டியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் Twin throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர் பைக் சாகசங்கள் வீடியோவாக எடுத்து 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார். இவருக்கு 20 லட்சத்திற்கும் அதிகமான பாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள்.
இவர் தனது இரு சக்கர வாகனத்திலேயே லடாக் வரை சென்று வந்துள்ளார். அது போல் இங்கிருந்து பைக்கிலேயே லண்டனுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் அதற்காக ஸ்பான்சர்கள் கிடைத்தால் நிச்சயம் செல்வேன் என்றும் தெரிவித்திருந்தார்.

தேசிய நெடுஞ்சாலை
இந்த நிலையில் அவர் தேசிய நெடுஞ்சாலையில் 247 கிமீ. வேகத்தில் பைக்கில் பறப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் குற்றம்சாட்டினர். இவர் செய்வது அடுத்தவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் டிடிஎஃப் வாசனை பார்த்து இளைஞர்களும் சாகசம் செய்ய புறப்படுவர் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இளைஞர்கள்
இவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான இளைஞர்கள் கூடுவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் தனது வீடியோவில் ஒரு விளக்கத்தை கொடுத்தார். அதில் தான் மக்கள் நடமாட்டம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லவில்லை. தான் சென்றது ஜமுனா ஹைவேஸ், அந்த ஹைவேஸில் அந்த வேகத்தில் செல்லலாம் என தெரிவித்திருந்தார்.

சர்ச்சைகள்
இந்த நிலையில் இவர் மீதான சர்ச்சைகள் அப்படியே அடங்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. இவர் பிரபல யூடியூபர் ஜி.பி.முத்துவை பைக்கில் அமர வைத்து அவருக்கு பயத்தை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. "செத்த பயலே, நார பயலே" என்ற நெல்லை தமிழில் ரசிகர்களை வசைப்பாடுபவர் ஜிபி முத்து.

நகைக் கடை
நகைக் கடை, மரக்கடை உள்ளிட்டவற்றை விட்டுவிட்டு யூடியூப் என முழு நேரமும் ஜிபி முத்து வீடியோக்களை செய்து வருகிறார். போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதற்காகவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இந்த நிலையில் இதுகுறித்து வாசன் தனது யூடியூப் சேனலில் கூறியிருக்கையில், நாம் இன்று ஜிபி முத்து அண்ணனுடன் ஒரு ரெய்டு போக போகிறோம்.

டிக்டாக்
ஆரம்பத்தில் அவர் டிக்டாக்கில் நடித்து கொண்டிருந்த போது அவர் வீடியோவை திறந்தாலே வசைப்பாடுவதுதான் வரும். அதை பார்க்கும் போது அவர் ஏதோ நம்மை திட்டுவது போன்று இருக்கும். இதனால் அந்த அண்ணனை ஆரம்பத்தில் எனக்கு பிடிக்காது. ஆனால் போக போக அவரது போராட்டக் குணமும், அவரது குழந்தைகளுடன் தனது தம்பி குழந்தைகளையும் அவரே பார்த்து வருவதையும் அறிந்ததால் அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று கூறினார்.

ஜி.பி. முத்துவுடன் சந்திப்பு
இதையடுத்து ஜிபி முத்துவை ஒரு இடத்தில் சந்திக்கிறார் வாசன், அங்கு வண்டியை பார்க்கும் முத்து, இதில் பிடித்துக் கொள்ள இடமே இல்லையே என்கிறார். அதற்கு வாசன் என்னை பிடித்துக் கொள்ளுங்கள், கட்டி பிடித்துக் கொள்ளுங்கள் என்கிறார். பிறகு பைக்கில் புறப்பட இருவரும் தயாராகும் போது இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பியதாக கூறி கன்னத்தில் முத்தமிட்டு கொள்கிறார்கள்.

ஸ்பீடு பிடிக்காது
வண்டியில் ஏறி உட்கார முடியாமல் ஜிபி முத்து தடுமாறுகிறார். பின்னர் அவரை வேறு ஒருவர் கை கொடுத்து உட்கார வைக்கிறார். இதையடுத்து இருவரும் பைக்கில் பயணத்தை தொடர்கிறார்கள். இவர்கள் செல்லும் தூரம் 20 கிமீ. ஆகும். முதலில் 50 கி.மீ. வேகத்தில் செல்லும் வாசனிடம் ஜிபி முத்து வேகமாக போனால் பிடிக்காது என்கிறார். இதையடுத்து படிப்படியாக 100 கி.மீ. தூரத்தை பிடிக்கிறார். உடனே பிரேக் பிடிக்கவில்லை என ஜிபி முத்துவிடம் பயத்தை காண்பிக்கிறார். அய்யோ 100 ,110, 120, 150 கி.மீ வேகம் செல்வதை அடுத்து ஜிபி முத்து 80 கி.மீ. தூரத்திலேயே செல்லுங்கள் என்கிறார்.

லடாக்கா சூட்டிங் இருக்கு
லாரிகள், வாகனங்கள் செல்லும் வாகனங்களில் வேகமாக செல்கிறார் வாசன். காற்றின் வேகத்தில் ஜிபி முத்துவின் வாய் காற்றில் பறப்பது போல் இருக்கிறது. ஐயோ ஐயோ என ஜிபி முத்துவின் குரல் ஆங்காங்கே கேட்கிறது. அய்யோ ஆண்டவா குறுக்கே வண்டி வருகிறது. லாரிக்கு நேராக போறீங்களே என்கிறார். இப்போது லடாக் போகிறோம் என வாசன் சொல்ல அதற்கு ஜிபி முத்துவோ அய்யோ எனக்கு சூட்டிங் இருக்கு என்கிறார். வேகத்தில் உதடு எல்லாம் ஆடுது என்கிறார் முத்து.

கதறும் ஜிபி முத்து
சின்னதம்பி படத்தில் மனைவியுடன் சினிமாவுக்கு போய்விட்டு டிவிஎஸ் 50 யை மாலைக்கண் என்பதால் தாறுமாறாக கவுண்டமணி ஓட்டும் காமெடி சீனை போல் , "தலைவரே எதிர்க்க இரு லைட் போட்டுக் கொணடு பைக் வருதே நடுவே போலாமா என வாசன் கேட்க அதற்கு என்னாது அது பைக்கா லாரி தம்பி" என ஜிபி முத்து சொல்கிறார். நடுவே இருகைகளையும் எடுத்து விடுகிறார் வாசன், அதற்கு அய்யோ கையை விட்ராதீங்க என கதறுகிறார் ஜிபி முத்து. இந்த வீடியோவில் 150 கி.மீ. வேகம் வரை வாசன் செல்லும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.












Click it and Unblock the Notifications