சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"என் கேரக்டரே மாறி போச்சு.. சேலை கட்ட போறேன்.. அங்கயும் வம்பு செஞ்சீங்க".. தெறிக்க விடும் சூர்யா

டிக்டாக் செயலி நீக்கியது சரியே என்று ரவுடிபேபி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: "டிக்டாக்கால என் கேரக்டரே மாறிப்போச்சு.. ஆனா புது ஆப் வந்தால், புது சூர்யாவை பார்ப்பீங்க.. சுடிதார், சேலை கட்டிட்டு வருவேன்.. நம்ம சூர்யா இப்படி மாறிட்டாங்களா அப்படின்னு நீங்க எல்லாரும் சொல்லணும்.. அங்கியும் வந்து ஏதாவது பேசினீங்கன்னா, திரும்பவும் அந்த மாதிரிதான் வீடியோ போடற மாதிரி வரும்" என்று டிக்டாக் ஆப் தடை செய்யப்பட்டது குறித்து ரவுடி பேபி சூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டிக்டாக் செயலி நீக்கியது சரிதான்.. ரவுடிபேபி சூர்யா அளித்த பேட்டி - வீடியோ

    டிக்டாக் செயலி சேவை நேற்று முதல் நிறுத்தப்பட்டு விட்டது.. இதனால் இந்த டிக்டாக்கின் மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானவர்கள் ஏராளமானோர்.

    அந்த வகையில் ரவுடி பேபி சூர்யாவும் ஒருவர்.. ஆட்டம், பாட்டம், துக்கம், சந்தோஷம், தற்கொலை முயற்சி வரை சென்று மீண்டு வந்துவிட்டார். தற்போது செயலி தடை செய்யப்பட்டது குறித்து அவர் சொன்ன கருத்து இதுதான்:

    "டிக்டாக் ஆப்பை தடை செய்தது வருத்தமான விஷயம்..இன்னொரு வகையில் இது சந்தோஷமான விஷயமும்கூட.. ஏன்னா, நம்ம சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இப்போ பிரச்சனை ஓடிட்டு இருக்கு.. அதுல இந்திய வீரர்கள் 20 பேர் இறந்திருக்காங்க.. அதனால இது வருத்தமானது.

    என்ட் கார்டு போட்ட டிக்டாக்.. கூகுள் பிளே ஸ்டோரிலும் தூக்கியாச்சு.. ஆப்பும் ஓப்பன் ஆகவில்லை என்ட் கார்டு போட்ட டிக்டாக்.. கூகுள் பிளே ஸ்டோரிலும் தூக்கியாச்சு.. ஆப்பும் ஓப்பன் ஆகவில்லை

     பீசா, பர்க்கர்

    பீசா, பர்க்கர்

    நம்ம நாட்டுக்கு நாமதான் சப்போர்ட் பண்ணனும் ஒரு இந்திய குடிமகளா, குடிமகனா.. வெளிநாட்டுல விக்க கூடிய எந்த புராடக்டயும் தயவுசெய்து வாங்க வேணாம்.. அதை அவாய்ட் பண்ணணும். நம்ம ஊர்லயே நாமளே தயாரிக்கிற பொருட்களை வாங்கணும்.. சாப்பாடும் அந்த மாதிரிதான். நம்ம இந்திய சாப்பாட்டில் உள்ள சத்து, அடுத்து நாட்டுல இருக்கிற பீசா,பர்க்கரில் சாப்பாட்டில் இல்லை.

    சந்தோஷம்

    சந்தோஷம்

    டிக்டாக்கை தடை பண்ணது எனக்கு சந்தோஷம்தான்.. அடுத்த நாட்டு சமாச்சாரம் நமக்கு எதுவும் வேணாம்ன்னு நினைக்கிறேன்.. இனிமேல் அந்த ஆப் வந்தாலும் நான் அதை யூஸ் பண்ணுவேனான்னு எனக்கு தெரியல. கண்டிப்பா, சின்னத்திரைக்கும், வெள்ளித்திரைக்கும் ட்ரை பண்ணிட்டு இருக்கேன்.. பேசிட்டு இருக்காங்க.. அநேகமாக படத்துல நடிக்க போயிடுவேன்... புது ஆப் வரும்னு சொல்றாங்க.. புது ஆப் வந்தால், புது சூர்யாவா வருவேன்.

     சுடிதார், சேலை

    சுடிதார், சேலை

    நம்ம சூர்யாவா இது அப்படிங்கிற அளவுக்கு மாறி காட்டுவேன்.. சுடிதார், சேலை கட்டிட்டு வருவேன்.. எப்பவும் சூர்யாவுக்கு சப்போர்ட் பண்ணுங்க. நம்ம சூர்யா இப்படி மாறிட்டாங்களா அப்படின்னு நீங்க எல்லாரும் சொல்லணும்.. அங்கியும் வந்து ஏதாவது பேசினீங்கன்னா, திரும்பவும் என் ரசிகர்களுக்குகாக அந்த மாதிரிதான் வீடியோ போடற மாதிரி வரும்.. அதுல உங்க சப்போர்ட் வேணும்.. டிக்டாக்கில் நான் இழந்தது, என் ஒரிஜினல் கேரக்டரே மாறிப்போச்சு.

     கேரக்டர்

    கேரக்டர்

    என் ஒரிஜனில் குணம் அது கிடையாது.. அது என்கூட பழகுறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். இளகின பொண்ணு நான்.. சின்ன விஷயத்தைகூட தாங்க முடியாது.. எனக்கு திமிர்னு சொல்றாஙக.. நான் அப்படி இல்லை.. பப்ளிசிட்டி ஒன்னு கிடைச்சது இந்த டிக்டாக் ஆப்பில்தான்.. ஆனால் என் பேஸிக் கேரக்டர் அது கிடையாது" என்றார்.

    English summary
    tiktok remove: tiktok star rowdy baby suryas opinion
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X