"ரவுடி பேபி" நல்லாருக்கார்.. கட்டில் மீது உட்கார்ந்திருக்கார்.. போன் கூட பேசுறார்.. ரசிகர்கள் ஹேப்பி
சென்னை: தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்பட்ட ரவுடி பேபி சூர்யா, ஆஸ்பத்திரி பெட்டில் உட்கார்ந்து செல்போனில் பேசி கொண்டிருக்கும் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. இதையடுத்து அவரது ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் சிங்கப்பூரில் இருந்து திருப்பூர் வந்த டிக்டாக் பிரபலம் சூர்யா தன் வீட்டிற்கு வந்தார்.. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் சூர்யாவை கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள நேரில் சென்று அழைத்தனர்.
Recommended Video
அப்போது டெஸ்ட் செய்து கொள்வதற்கு முரண்டு பிடித்த அவரை, இறுதியில் ஒருவழியாக சமாதானப்படுத்தி டெஸ்ட்டுக்கு அழைத்து சென்றனர்.

இதனிடையே டெஸ்ட் எடுக்க வந்த தன்னை பற்றி தவறாக செய்தி வெளியிட்டதாக, தனியார் டிவி செய்தியாளரை மிரட்டி சூர்யா ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார்.. இந்த கொலை மிரட்டல் வீடியோவை அடிப்படையாக வைத்து அவர் மீது அந்த செய்தியாளர் போலீசில் புகார் தந்தார்.
புகாரின்பேரில் வீரபாண்டி போலீசாரும் சூர்யா மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(b), 500 and 506(2) என்ற ஆபாசமாக பேசுதல், அவதூறு பரப்புதல் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட அடுக்கடுக்கான பிரிவுகளில் வழக்கையும் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இன்று காலை தனது வீட்டில் சூர்யா தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது.
தற்போது, தூக்கு போட்டுக் கொண்டதாக சொல்லப்பட்ட சூர்யா, மயங்கி கீழே விழுந்த போட்டோக்கள் வெளிவந்துள்ளன.. அதில் நைட்டி அணிந்துள்ளார் சூர்யா.. பிறகு ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.. அரசு ஆஸ்பத்திரி வார்டு பெட்டில் சூர்யா உட்கார்ந்துள்ளார்.. அவரது கையில் டிரிப்ஸ் ஏற்றியிருப்பதற்கான அடையாளம் உள்ளது.. பெட்டில் உட்கார்ந்தபடியே செல்போனில் யாரிடமோ பேசி கொண்டிருக்கிறார். பார்ப்பதற்கு தெளிவாக இருக்கிறார்.
விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று சூரியாவின் டிக்டாக் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications