நிர்வாண படங்கள்.. வெளியே வரப்போகும் பூதம்.. டிம் பெயின் ராஜினாமா ஏன்? உண்மையில் என்ன நடந்தது?
சென்னை: ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெயின் ராஜினாமா செய்ததிற்கு என்ன காரணம் என்ற விவரங்கள் தற்போது முழுமையாக வெளியாகி உள்ளது.
Recommended Video
2010 வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக இருந்தவர் டிம் பெயின். அதன்பின் பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து தூக்கப்பட்டார். ஆனாலும் லோக்கல் போட்டிகளில் நன்றாக ஆடிக்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் 7 வருடம் கழித்து 2017ல் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு திரும்பினார். கம்பேக் கொடுத்த பின் சில போட்டிகளில் நன்றாக ஆடினார்.

பாலியல் குற்றச்சாட்டு
அப்போதுதான் இவர் 2017ல் பெண் ஊழியர் ஒருவருக்கு தவறான புகைப்படங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு கீழ் பணியாற்றும் பெண் ஒருவரிடம் இவர் பாலியல் ரீதியாக சாட் செய்துள்ளார். அதோடு பெண்ணுக்கு நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.

வீடியோ
நிர்வாண வீடியோ தொடங்கி பாலியல் ரீதியாக தொடர்ந்து அந்த பெண்ணிடம் பேசி உள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் அந்த பெண்ணின் அனுமதியோடு நடந்ததா இல்லையா என்ற முழு விபரம் தெரியவில்லை. இது தொடர்பான குழப்பமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் இது தெரிந்தவுடன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட் இதை விசாரித்து உள்ளது.

மீடியா
பெரிய அளவில் மீடியா வெளிச்சம் படாமல் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் விசாரணையில் அவர் பாலியல் ரீதியாக சாட் செய்தது கண்டுபிடிக்கப்பட்டாலும், ஆஸ்திரேலிய போர்ட் விதிமுறைகளை அவர் மீறியதாக நிரூபிக்கப்படவில்லை. இதையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கேப்டன்
இதையடுத்து 2018ல் ஆஸ்திரேலியாவின் ஆஷஷ் டெஸ்ட் தொடரில் உப்புதாள் விவகாரம் பெரிதானது. பந்தை உப்புதாள் வைத்து தேய்த்த சம்பவம் சர்ச்சையானது. இதனால் ஸ்மித் கேப்டன்சியும், வார்னர் துணை கேப்டன்சியும் பறிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி டிம் பெயினுக்கு கேப்டன்சி வழங்கப்பட்டது.

குடும்பம்
இந்த பாலியல் விவகாரம் தொடர்பாக அப்போதே டிம் பெயின் தனது குடும்பத்திடம் அனைத்து விவரங்களையும் தெரிவித்துள்ளார். தனது மனைவியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்த நிலையில்தான் தற்போது மீண்டும் இந்த பாலியல் சாட் பூதம் வெளியே கிளம்பி இருக்கிறது. ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில இவரின் சாட்களை கைப்பற்றி உள்ளது. இதை விரைவில் வெளியிட உள்ளதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளன.

விரைவில் வெளியிடும்
இதன் காரணமாக தனது தவறுக்கு பொறுப்பேற்று டிம் பெயின் பதவி விலக முடிவு செய்துள்ளார். ஒரு கேப்டனாக நான் நல்ல முன்னுதாரணமாக இருக்க வேண்டும். இந்த சாட்கள் வெளியே வரும்பட்சத்தில் அது நல்ல உதாரணமாக இருக்காது. இதனால் எனது தவறுகளுக்கு பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன். ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்ட், எனது மனைவி, குடும்பம், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

உதாரணம்
என்னால் ஒரு நல்ல உதாரணத்தை எனது ரசிகர்களுக்கு வழங்க முடியவில்லை என்று கண்ணீரோடு டெஸ்ட் கேப்டன்சிக்கு டிம் பெயின் விடை கொடுத்துள்ளார். முன்பே உப்புதாள் விஷயம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் உலகம் சர்ச்சையை சந்தித்த நிலையில் ஆஷஸ் தொடருக்கு முன்பாக அடுத்த சர்ச்சையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சிக்கி உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications