Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எப்பவும் உங்களுக்கு 16 வயசுதான்.. இதை மட்டும் செஞ்சா போதும்! ஆனா கொஞ்சம் ரிஸ்க்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மனிதர்களுக்கு வயதாவதை எவ்வாறு தடுப்பது? அல்லது இந்த செயல்முறையை இன்னும் கொஞ்ச நாள் தள்ளி போடுவது எப்படி? என்பதில்தான் பல்வேறு அறிவியல் ஆய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அறிவியல் உலகம் ஒரு தீர்வை முன் வைத்திருக்கிறது. ஆனால் அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதுதான் தற்போது கேள்வி குறியாகியுள்ளது.

இந்த உலகம் உண்மையில் விசித்திரமான ஒன்று. இங்குள்ள உயிரினங்களின் வாழ்க்கையும் விசித்திரமானதுதான். உலகம் போலவும், இங்கு இருக்கும் உயிரினங்கள் போலவும் வெறு எதுவும் இந்த அண்டத்தில் கிடையாது என்பதால், இவை அனைத்தும் புதிய விஷயங்கள். எனவே மனிதர்களான நமக்கு எதுவும் தெரியாது. இதுவரை வாழ்ந்து மறைந்த உயிரினங்களை ஆய்வு செய்ததன் மூலம் கற்ற விஷயங்களை கொண்டு சில தவல்களை நாம் புரிந்துக்கொண்டிருக்கிறோம் அவ்வளவுதான்.

Time travel used to prevent aging in humans

இந்த புரிதலை வைத்தக்கொண்டு மேலும் பல ஆராய்ச்சிகளை செய்து வருகிறோம். சில ஆராய்ச்சிகள் வெற்றியடைந்துள்ளன. பல ஆய்வுகள் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மனிதர்கள் தங்களுக்கு வயதாகாமல் தடுப்பது எப்படி? என்பது குறித்து பல ஆய்வுகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமான் காலம் முதலே இது குறித்த மனிதர்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில் வயதாகாமல் இருக்க சைவ உணவை மட்டும் சாப்பிடுவது, அசைவ உணவை மட்டும் சாப்பிடுவது, கடல் உணவில் குறிப்பிட்ட சில வகை உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது என பல விஷயங்களை மனிதர்கள் முயற்சி செய்து பார்த்திருக்கிறார்கள். மூலிகை, அதிசய நீரூற்று என காடு மேடு எல்லாம் நம் ஆட்கள் அலைந்திருக்கிறார்கள். ஆனால் பலன் கிடைத்ததா? என்று கேட்டால், கிடையாது என்பதுதான் பதில்.

சரி வயதாவது என்றால் என்ன? என்பது குறித்து முதலில் பார்ப்போம். இந்த உலகில் தோன்றிய உயிரினங்கள் அனைத்தும் காலத்திற்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக்கொள்ளும். இதற்கு பெயர்தான் பரிணாம வளர்ச்சி. அதாவது, ஒரு காலத்தில் கடல் உயிரினங்களில் ஒன்றாக இருந்த நாம், குரங்காகவும் பின்னர் காட்டு மனிதர்களாகவும், தற்போது நாகரிக மனிதர்களாகவும் மாறியிருக்கிறோம். இதற்கு பெயர்தான் பரிணாம வளர்ச்சி.

எளிதாக செத்து போக்கும் வகையில் உருவாகியுள்ள உயிரினங்களுக்கு சீக்கிரம் வயதாகிவிடும். உதாரணத்திற்கு கொசு எளியதாக உயிரிழந்துவிடும் உடலமைப்பை பெற்றிருக்கிறது. எனவே அதன் ஆயுட்காலம் வெறும் 50 நாட்கள்தான். இதே ஆமை, திமிங்கலம் போன்ற உயிரினங்கள் கொஞ்சம் பலமான (பலம் என்றால் சிங்கம், புலி போன்றதல்ல) உடல் அமைப்பை பெற்றிருக்கின்றன. எனவே அந்த உயிரினங்கள் நீண்ட காலம் வாழ்கிறது. இந்த காலத்தில் அது மெதுவாக பரிணாமமடைகிறது.

மனிதனுக்கும் இது பொருந்தும். ஆனால், நாம் சிந்தனை வேகமாக இருப்பதால் நாமும் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சரிங்க இந்த கதையெல்லாம் வேண்டாம், நீண்ட ஆயுசுக்கு ஏதாவது வழி இருக்கா? இல்லையா? என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. ஆனால் கொஞ்சம் ரிஸ்க்கான வழி அது.

அதாவது, நீங்கள் ஒரு ராக்கெட்டில் இந்த பிரபஞ்சத்தை சுற்றி வர வேண்டும். விஷயம் என்னவெனில், நீங்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்க வேண்டும். ஒளி ஒரு விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். அதாவது, ஒரு விநாடியில் ஒளி, இந்த பூமியை 7 முறை சுற்றி வந்துவிடும். இவ்வளவு வேகத்தில் மனிதர்கள் பயணித்தால் நிச்சயம் நமக்கு வயதாகாது. இதைத்தான் காலப்பயணம் (டைம் ட்ராவல்) என்று சொல்வார்கள்.

ஆனால், இதில் உள்ள சிக்கல் என்ன தெரியுமா? டைம் ட்ராவல் செய்ய வேண்டும் எனில், அதற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ராக்கெட் 300 கி.மீ வேகத்தில் 600 கி.மீ தூரத்திற்கு செல்கிறது எனில் அதற்கு 300 லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ராக்கெட்டில் அதிகபட்சமாக 500 லிட்டர் பெட்ரோல்தான் நிரப்ப முடியும். அந்த அளவுக்குதான் டேங்க் கெபாசிட்டி இருக்கிறது.

சரி டேங்கை ஃபுல் பண்ணிட்டு வேகமாக போலாம் என்றால் கூட 400 கி.மீ வேகத்தில்தான் போக முடியும், இப்படியே போனா வண்டி மைலேஜ் இல்லாம பெட்ரோல் காலியாகி நின்றுவிடும். மறுபடியும் கூடுதல் வேகம் போக வேண்டும் எனில் கூடுதல் பெட்ரோல் அவசியம். அப்படின்னா.. ராக்கெட்டை ஓர் இடத்தில் நிறுத்தி பெட்ரோல் அடிக்க வேண்டும். திரும்பவும் 0 கி.மீலிருந்து புறப்பட வேண்டும்.

இதற்கு தீர்வு காண பெட்ரோல் டேங்கின் சைஸை பெரியதாக்க வேண்டும். இப்படி செய்தால் ராக்கெட்டின் எடையும் கூடும். ஆக எப்படி இருந்தாலும், 400 கி.மீக்கு மேல் போக முடியாது. எனவே டைம் ட்ராவல் அப்படிங்குறது இப்போதைக்கு சாத்தியம் கிடையாது என்று சொல்லப்படுகிறது. யாருக்கு தெரியும்? இன்னும் 50 வருஷத்துக்கு அப்புறம் சாத்தியமாகலாம். அப்படி சாத்தியமானால் நாம் வயதாவதிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+