திமுகவிற்கு 46% வாக்குகள்.. அதிமுகவிற்கு 34.6 %... கட்சிகள் வாரியாக வாக்குகள் சதவீதம்.. சர்வே
சென்னை: திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 46 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், அஇஅதிமுக கூட்டணி 34.6 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக-பாஜக-பாமக மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும், திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் சந்திக்கின்றன
இதேபோல் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஒரு அணியும், டிடிவி தினகரனின் அமமுக, விஜயகாந்தின் தேமுதிக, எஸ்டிபிஐ மற்றும் சில கட்சிகள் இணைந்து ஒரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனியாக தேர்தலை சந்திக்கிறது. ஐந்து முனை போட்டி நிலவுவதால் யார் வெல்வார்கள் என்ற பரபரப்பு நிலவுகிறது..

திமுக வெற்றி
இந்நிலையில் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் திமுக காங்கிரஸ் கூட்டணி 177 இடங்களில் வென்று ஆட்சியை பிடிக்கும் என்றும் அதிமுக-பாஜக கூட்டணி 49 இடங்களில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும், அமமுக, மநீம ஆகியவை தலா 3 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் பிற கட்சிகள் 2 இடங்களில் வெல்லலாம் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

6 சதவீதம் அதிகம்
தமிழகத்தில் கட்சிகள் வாரியாக பெறும் வாக்கு சதவீதத்தையும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் சர்வே நடத்தி வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரத்தை இப்போது பார்க்கலாம். திமுக காங்கிரஸ் இடம் பெற்றுள்ள தேசிய முற்போக்கு கூட்டணி 46 சதவீதம் வாக்குகள் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறுகிறது. அதாவது போனமுறையைவிட இந்த முறை 6.6 சதவீதம் வாக்குகள் அதிகம் பெறும் என்கிறது கணிப்பு.

9.1 சதவீதம் குறைவு
இதனிடையே அதிமுக பாஜக இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி 34.6 சதவீதம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடிக்குமாம். கடந்தமுறையை விட அதிமுக கூட்டணி இந்த முறை 9.1 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பெறும் என்று சொல்கிறது டைம்ஸ் நவ் சர்வே.

டிடிவி தினகரன் 3.6%
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் முதல்முறையாக சட்டசபை தேர்தலில் களம் காணும் நிலையில் இந்த முறை அந்த கட்சி தலைமையிலான கூட்டணி 4.4 சதவீதம் பெறும் என்கிறது சர்வே. இதேபோல் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி இந்த முறை 3.6 சதவீதம் வாக்குகள் பெறுமாம். மற்ற கட்சிகள் 11.4 சதவீதம் பெற வாய்ப்பு உள்ளதாம்.
-
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
எகிறும் எதிர்பார்ப்பு! ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவை! -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்!










Click it and Unblock the Notifications