சென்னையில் மக்கள் நீதி மய்யம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.. டைம்ஸ் நவ் சர்வேயில் செம்ம தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை தேர்தலை பொறுத்தவரை சென்னையில் இந்த முறை மக்கள் நீதி மய்யம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று டைம்ஸ் நவ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் ஆங்கில ஊடகம் சிவோர்ட்டர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும். யாருக்கும் எத்தனை இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதை கணித்து வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திமுக கூட்டணி 177 இடங்களை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 49 இடங்களில் வெல்லும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் நீதி மய்யம் 3 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது.

அதிக வாக்குகள்

அதிக வாக்குகள்

வாக்கு சதவீதம் என்று பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழகத்தில் 46 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும், அஇஅதிமுக கூட்டணி 34.6 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் டைம்ஸ் நவ்-சி வோட்டர் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 4.4 சதவீதம் பெறும் என்றும் டிடிவி தினகரனின் அமமுக கூட்டணி இந்த முறை 3.6 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை வாக்குகள்

சென்னை வாக்குகள்

மண்டல வாரியாக எந்த கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெறும் என்பதையும் கணித்துள்ளது டைம்ஸ் நவ் நிறுவனம். சென்னையை பொறுத்தவரை திமுக கூட்டணி இந்த முறை 44 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணித்துள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணி 32.8 சதவீதம் வாக்குகள் பெறும் என்றும் கணித்துள்ளது.

மக்கள் நீதி மய்யம்

மக்கள் நீதி மய்யம்

அமமுக கூட்டணி சென்னையில் 2.7 சதவீதம் வாக்குகள் பெறும் என்று கணித்துள்ளது. அதேநேரம் மற்றவர்கள் 20.5 சதவீதம் வாக்குகளை பெறுவார்கள் என்று டைம்ஸ் நவ் சிவோர்ட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மற்றவர்கள் என்பதை மெயினாக மக்கள் நீதி மய்யம் என்றே அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மநீமவிற்கு வரவேற்பு

மநீமவிற்கு வரவேற்பு

மக்கள் நீதி மய்யமே இதில் பெரும்பான்மையான வாக்குகளை பெறும் என்று டைம்ஸ் சர்வே கூறுகிறது. இது தொடர்பாக டைம்ஸ் நவ் ஊடகவியலாளர் கூறுகையில், சென்னையில் பொதுவாக திமுக பலமான கட்சியாகும். இந்த முறை மக்கள் நீதி மய்யம் மீது வாக்காளர்கள் மத்தியில் நல்ல ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. புதிய வாக்காளர்கள், படித்தவர்கள் மத்தியில் மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். அதிமுகவின் வாக்குகளை மநீம உள்ளிட்ட கட்சிகள் பிரிக்க போகின்றன என்றும் அதனால் அதிமுக பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும் என்று இந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+