சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

து.பொ.செ இல்லை.. கொ.ப.செ.வில் இத்தனை பேரு-அப்ப நான் யாரு.. அவ்வளவுதானா?திருச்சி சிவா கடும் அதிருப்தி

Google Oneindia Tamil News

சென்னை: திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவியும் தரப்படவில்லை; கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலும் புதிது புதியதாக நியமனங்கள்.. இப்படி செய்து கொண்டே இருந்தால் எனக்கான மரியாதை இவ்வளவுதானா? என திருச்சி சிவா எம்.பி. அதிருப்தியி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவின் திருச்சி அடையாளங்களில் ஒருவராக திகழ்பவர் சிவா எம்.பி. திமுகவின் டெல்லி முகங்களில் ஒருவராகவும் இருப்பவர் திருச்சி. ஆனாலும் திமுகவில் இன்னமும் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் குமுறலை கொட்டி இருக்கிறாராம் திருச்சி சிவா.

மாவட்டச் செயலாளராகும் டாக்டர் சரவணன்.. மதுரையில் தேர்தல் பணிகள் விறுவிறு.. மக்கள் சந்திப்பு ஜரூர்.! மாவட்டச் செயலாளராகும் டாக்டர் சரவணன்.. மதுரையில் தேர்தல் பணிகள் விறுவிறு.. மக்கள் சந்திப்பு ஜரூர்.!

ஆ. ராசா து.பொ.செ.

ஆ. ராசா து.பொ.செ.

திமுகவில் அண்மையில் துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடியும் ஆ. ராசாவும் நியமிக்கப்பட்டனர். இந்த பதவி தமக்கு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் திருச்சி சிவா. ஆனால் தன்னால் கட்சிக்கு அழைத்துவரப்பட்ட ஆ. ராசாவுக்கு பதவி கொடுத்து விட்டு தாம் கொள்கை பரப்புச் செயலாளராகவே இருப்பதா? என அப்போதே குமுறி இருக்கிறார் திருச்சி சிவா.

கொள்கை பரப்பு செயலாளர்கள்

கொள்கை பரப்பு செயலாளர்கள்

இந்த குமுறல் ஓய்வதற்குள் திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக திண்டுக்கல் லியோனியும் சபாபதி மோகனும் நியமிக்கப்பட்டனர். இதில் இன்னமும் கூடுதலாக கடுப்பாகி இருக்கிறாராம் திருச்சி சிவா. கொள்கை பரப்பு செயலாளர் பதவியையாவது ஒரு அங்கீகரித்துடன் தந்திருக்கலாம். இப்போது அதிலும் ஏழெட்டு பேரை சேர்த்தால் நான் என்ன பத்தோடு பதினொன்றா? கட்சிக்காக இவ்வளவு காலம்பாடுபட்டு என்ன பயன்? என கொந்தளித்திருக்கிறாராம் திருச்சி சிவா.

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்

ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்

ராஜ்யசபா தேர்தலில் திருச்சி சிவாவுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்கிற கேள்வி எழுந்திருந்தது. ஆனால் திமுக தலைமை திருச்சி சிவாவை ராஜ்யசபா எம்.பியாக்கியது. அதேநேரத்தில் அண்மையில் ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் திருச்சி சிவாவை துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் விரும்பியது.

திருச்சி சிவா அதிருப்தி

திருச்சி சிவா அதிருப்தி

திமுக தலைமையோ திருச்சி சிவாவை, ராஜ்யசபா துணைத் தலைவர் வேட்பாளராக நிறுத்த முன்வரவில்லை. திமுகவைப் பொறுத்தவரையில் எப்படியும் தோற்கத்தான் போகிறோம்.. அதற்கு ஏன் போட்டியிட வேண்டும்? என்பதுதான் நிலைப்பாடு. திருச்சி சிவாவோ, இது தமக்கான அங்கீகார பிரச்சனை. கட்சி தலைமை தன்னை அங்கீகரிக்காமல் அடுத்தடுத்து இப்படி ஓரம்கட்டினால் எப்படி? எனக்கு என்னதான் மரியாதை என்கிறாராம். திருச்சி சிவாவைப் பொறுத்தவரை பேச்சாளர் என்கிற அளவில் ஓகேதான்.. தொண்டர் பலம் இல்லை என்பதுதான் அவருக்கான குறை என்கின்றனர் சில சீனியர்கள்.

English summary
Sources said that Tiruchi Siva MP upset over the New DMK propaganda secretaries appointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X