தன் முகத்திரையை தானே கிழித்த அமித்ஷா.. வயிற்றெரிச்சல்.. விசிக தலைவர் திருமாவளவன் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பெரும் விவாதத்துக்குள்ளாகி உள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?. எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார் என்று திருமாவளவன கண்டனம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் காரசாரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் சாசனம் தொடர்பாக மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவையிலும் விவாதம் நடைபெற்றது. மக்களவை விவாதங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியும், மாநிலங்களவை விவாதத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பதிலளித்தனர். அப்போது அமித்ஷா அம்பேத்கர் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.

amit sha ambedkar

அமித்ஷா பேசும்போது, "தற்போதைய அரசியலில் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர். அம்பேத்கர் என்று பேசுவது பேஷனாகிவிட்டது. இப்படி சொல்வதற்கு பதிலாக கடவுளின் நாமத்தை பல முறை உச்சரித்தால் அவர்களுக்கு சொர்க்கமாவது கிடைக்கும். இருப்பினும் அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் கட்சியினர் இப்போதாவது உச்சரிப்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. காங்கிரஸ் உண்மையான உணர்வுகளுடன் செயல்பட வேண்டும்." என்றார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு கடும் கண்டணங்கள் எழுந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமித்ஷாவை மன்னிப்பு கேட்க சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வெளிநடப்பு செய்வது, தீர்மானம் கொண்டு வருவது என்று தங்களின் கண்டனத்தால் நாடாளுமன்றத்தையே முடக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், "மக்களைப் பற்றி கவலைப்படுவோர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள். பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டும்." என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார். இந்நிலையில், "புரட்சியாளர் அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி தான் அவமதித்தது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு கூட காங்கிரஸ் மறுத்துவிட்டது. அதைத்தான் அமித்ஷா அம்பலப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை திசை திருப்புகிறார்கள் என்று பிரதமர் கூறியிருந்தார்.

amit sha ambedkar

இதைத்தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அமித்ஷாவுக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப்பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்?

எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

அரசமைப்புச் சட்டமும் புரட்சியாளர் அம்பேத்கரும் தான் அவர்களின் உண்மையான எதிரிகள். இதனையே விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். சங்பரிவார்கள் புரட்சியாளர் அம்பேத்கரைப் போற்றுவதெல்லாம் எளிய மக்களை ஏய்க்கும் எத்து வேலைகள். புரட்சியாளர் அம்பேத்கர் "விசுவரூபம் " எடுக்கிறார். சனாதனிகளின் சதிமுயற்சிகள் சாம்பலாகும் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+