நாட்டிலேயே டாப் நம்ம நெல்லை.. சுத்தமான காற்று இங்குதான் கிடைக்கிறது! மோசமான நகரங்கள் எவை? லிஸ்ட் இதோ
சென்னை: சுத்தமான காற்று கொண்ட (Air Quality Index) நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திருநெல்வேலி (Tirunelveli / Nellai) முதலிடம் பெற்றுள்ளது. நெல்லை AQI 33 பெற்று பாதுகாப்பான நகரமாக உள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் நகரம் 5வது இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக டெல்லி உள்ளிட்ட நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மாசடைந்து கொண்டே செல்கிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கு தீபாவளி பண்டிகையின் போதெல்லாம் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள காற்று மாசு காரணமாக அதிகம் பாதித்த நகரங்கள் மற்றும் பாதுகாப்பான காற்றை கொண்டிருக்கும் நகரங்களின் பட்டியலை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த வாரம் வெளியிட்டது.
அதில், தரமுள்ள காற்று இருக்கும் நகரமாக தமிழ்நாட்டின் நெல்லை (திருநெல்வேலி) விளங்குகிறது. காற்று தரக் குறியீட்டில் நாட்டிலேயே பாதுகாப்பான நகரமாக நெல்லை விளங்குவதாக இந்த பட்டியல் தெரிவிக்கிறது. நெல்லையின் AQI அளவு 33 ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு அருகில் அமைந்திருக்கும் நெல்லை நகரத்தின் காற்றின் தரம் அதன் இயற்கை நிலப்பரப்பு காரணமாக நன்றாக உள்ளது.
சிறப்பான காற்றின் தரக் குறியீட்டிற்கான பட்டியலில் 5வது இடத்தில் தஞ்சாவூர் உள்ளது. தஞ்சாவூரின் AQI அளவு 33 ஆகும். டாப் 10 இடங்களில், 7 இடங்களில் தென் மாநில நகரங்கள் உள்ளன.
டாப் 10 இடங்கள்
நெல்லை (தமிழ்நாடு),
நஹர்லாகன் (அருணாசல பிரதேசம்),
மடிகேரி (கர்நாடகா),
விஜயபுரா (கர்நாடகா),
தஞ்சாவூர் (தமிழ்நாடு),
கொப்பல் (கர்நாடகா),
வாரணாசி (உத்தரபிரதேசம்),
ஹூப்ளி (கர்நாடகா),
கண்ணூர் (கேரளா),
சால் (சத்தீஸ்கர்) ஆகிய நகரங்கள் உள்ளன.
அதேபோல, காற்று மாசுபாடு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
காற்று மாசில் மிக மோச டாப் 10
டெல்லி
காசியாபாத் (உத்தரபிரதேசம்),
பைரனிஹாட் (மேகாலயா),
சண்டிகர் (பஞ்சாப்),
ஹபூர் (உத்தர பிரதேசம்),
தனபாத் (ஜார்க்கண்ட்),
பாடி (ஹிமாச்சல பிரதேசம்),
கிரேட்டர் நொய்டா (உத்தர பிரதேசம்)
குஞ்சேமுரா (மஹாராஷ்டிரா),
நொய்டா (உத்தர பிரதேசம்) ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.
காற்றின் தர அளவீடு
AQI அளவுகள் பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 0-50 வரை இருந்தால் பாதுகாப்பானது, 51-100 வரை இருந்தால் திருப்திகரமானது, அதேசமயம், நோய் எதிர்ப்புதிறன் குறைவாக உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருக்கும். 101 முதல் 200 வரை இருந்தால் மிதமாக மாசுபட்டது. ஆஸ்துமா, இதயநோய், நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும்.
அதன்பிறகு "மோசமானது" (AQI 201-300) நீண்டநேரம் வெளியில் இருப்பவர்களுக்கு சுவாச கோளாறுகள் ஏற்படும், "மிகவும் மோசமானது" (301-400) - சுவாச நோய்கள் ஏற்படக்கூடும். "கடுமையானது " (401-450), மற்றும் 450க்கு மேல் "கடுமையாகத் தீவிரமானது" - ஆரோக்கியமானவர்களை பாதிப்பது மட்டுமன்றி ஏற்கனவே நோயுடன் இருப்பவர்களை தீவிரமாக பாதிக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications