உலகில் வேகமாக வளரும் சிட்டிகளில் திருப்பூர் சாதனை.. நியூயார்க், பெய்ஜிங்கை பின்னுக்கு தள்ளியது!
உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை கூட திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது.
Recommended Video

சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களை கூட திருப்பூர் நகரம் முந்தி சாதனை படைத்து இருக்கிறது.
உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. இதில் முதல் பத்து இடங்களில் அனைத்தும் இந்திய நகரங்கள்தான் உள்ளது.
இதில் முதல் இடத்தில் குஜராத்தின் சூரத் நகரம் இருக்கிறது. அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

திருப்பூர் சாதனை
இதில் திருப்பூர் மிகப்பெரிய சாதனையை படைத்து இருக்கிறது. அதன்படி திருப்பூரின் வளர்ச்சி விகிதம் 8.36 சதவிகிதமாக உள்ளது. இதனால் திருப்பூர் உலகிலேயே வேகமாக வளரும் நாடுகளின் பட்டியலில் 6வது இடம் பிடித்து சாதனை செய்துள்ளது.

சென்னையை முந்தியது
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், திருப்பூர் இந்த பட்டியலில் சென்னையை முந்தி இருக்கிறது. சென்னை இதில் 9வது இடத்தில் உள்ளது. சென்னை 8.17 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது. சென்னையைவிட திருப்பூர் 0.19 சதவிகிதம் அதிகம் பெற்று உள்ளது.

திருச்சி சாதனை
அதேபோல் இதில் திருச்சியும் பெரிய சாதனை படைத்து இருக்கிறது. திருச்சி இந்த பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளது. திருச்சி 8.29 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. திருச்சியும் சென்னையை விட அதிக வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

உலக நாடுகள்
உலகின் பெரிய நகரங்களை கூட திருப்பூர் முந்தி இருக்கிறது. நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ், பெய்ஜிங், லண்டன், கலிபோர்னியா உள்ளிட்ட பெரிய நகரங்களை விட திருப்பூர் அதிக வளர்ச்சியை பெற்று இருக்கிறது. அதேபோல் திருச்சியும், சென்னையும் கூட, இதில் கவனிக்கதகுந்த இடத்தை அடைந்துள்ளது.

எப்படி சாத்தியம்
இதற்கு திருப்பூரில் இருக்கும் குட்டி குட்டி தொழிற்சாலைகள்தான் காரணம். இங்கு நடக்கும் நூல் உற்பத்தியும், பின்னலாடை உற்பத்தியும் பெரிய அளவில் அந்நகரத்தை முன்னேற்றி இருக்கிறது. அதேபோல் திருச்சியில் இருக்கும் தொழிற்சாலைகளும் அந்நகரத்தை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்கிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications