குட் பேட் அக்லி தோல்வி? புரொட்யூசருக்கு பெரிய லாஸ்! வசூல் பர்னிச்சரை உடைத்த திருப்பூர் சுப்பிரமணியம்
சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்திருந்த குட் பேட் அக்லி திரைப்படம் பெருவெற்றி படம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் அந்த படம் மிகப்பெரிய நஷ்டம் என பேசி அதிர வைத்திருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம். அந்த படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுக்கவில்லை எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைத்ரி மூவிஸ் தயாரிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் 10ஆம் தேதி வெளியானது. அஜித்குமார் உடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, சிம்ரன், ஜாக்கி ஷெரஃப், யோகி பாபு, பிரியா வாரியர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது.
படம் வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 30 கோடி ரூபாய் வசூலை முதல் நாளே ஈட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வர இருக்கும் நிலையில் படத்தின் வசூல் அதிகரித்ததால் படக்குழு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாத நிலையில் இரண்டு மாதங்களில் இரண்டு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வந்த நிலையில், படத்தின் வசூல் 1 மாதத்தில் 242 கோடியை எட்டியதாகச் சொல்லப்படுகிறது.
தற்போது இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் நிலையில் படம் கிரிஞ்ச் குடோனாக இருப்பதாக ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் படத்தின் வியூஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கு குட் பேட் அக்லி படம் லாபத்தை தரவில்லை எனக் கூறி அதிர வைத்திருக்கிறார் திருப்பூர் சுப்ரமணியம்.
இது தொடர்பாக யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர்களை நடிகர்களே தேர்ந்தெடுத்து விட்டு படங்களை அவர்கள் தான் இயக்குகிறார்கள். தற்போது டூரிஸ்ட் பேமிலி போன்ற சின்ன படங்கள் வெற்றி பெறுகின்றன. கண்டண்ட் காரணமாகவே மக்கள் அதனை ரசிக்கிறார்கள். மக்களின் ரசிப்பு தன்மை அதிகரித்தால் படங்களுக்கு வெற்றி கிடைக்கும். ஆனால் சில பெரிய ஹீரோக்கள் ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் படம் ஓடினாலே 100 கோடி 200 கோடி என உருட்டுகின்றனர்.
குட் பேட் அக்லி 200 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை எட்டி இருப்பதாகவும் அஜித் நடித்த படங்களில் அந்தப் படம் தான் அதிக வசூல் என சொல்கிறார்கள். உண்மையில் அந்த படம் தயாரிப்பாளருக்கு நஷ்டம் என சினிமா வட்டாரத்தில் பேசுகிறார்கள். லாபமா நஷ்டமா என்பதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும் .அதே நேரத்தில் விடாமுயற்சி படம் பயங்கர நஷ்டம் அடைந்து விட்டது. ரெட்ரோ திரைப்படமும் அப்படித் தான். நடிகர்கள் இப்போதெல்லாம் லாபத்தில் பங்கு கேட்கிறார்கள். ரெட்ரோ படம் முதல் நாளில் வெளியான தியேட்டர்களில் அடுத்த நாள் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஆக்கிரமித்துக் கொண்டது. ஆனால் அவர்கள் வெற்றி படம் என கேக் வெட்டுகிறார்கள்" என விளாசி உள்ள திருப்பூர் சுப்பிரமணியம்.












Click it and Unblock the Notifications