மச்சினிச்சி கர்ப்பம்.. திருதிருனு விழித்த மனைவியின் கணவர்! திருவள்ளூர் கோர்ட் நீதிபதி சரஸ்வதி அதிரடி
சென்னை: மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகிவிடுகிறது.. பெண்கள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்களும் பெருகி வருகின்றன.. அதேபோல, நாளுக்கு நாள் குடும்ப வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. இந்த குடும்ப வன்முறைகள் தொடர்பான வழக்குகளும் நீதிமன்றங்களில் குவிந்து வருவதாக புள்ளி விவரங்களும் கூறுகின்றன..

குடும்ப உறவுகள்
தம்பதியினரின் ஒற்றுமை, அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பு போன்றவைகளில் குடும்ப உறவுகளில் நீதிமன்றங்கள் காட்டும் அக்கறையானது, மிகுந்த கவனத்தை செலுத்தி வருவது பாராட்டத்தக்கது. என்றாலும் குடும்ப உறவுகளில் சிதைவுகள் தொடர்ந்து நடைபெறுவது கவலையை தந்து கொண்டிருக்கிறது. இதோ வெளிமாநிலத்தை சேர்ந்த குடும்பத்தில் நடந்த சம்பவமும் அப்படிததான்.
ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் நாயக்... 28 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது.. இவர் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், பிழைப்பு நடத்துவதற்காக சென்னைக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்..
மனைவியின் தங்கை
அப்போது மனைவியுடன், 16 வயதான மனைவியின் தங்கையையும் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.. இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்னை சாலவாயல் பகுதியில் தங்கி, பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடன் தங்கியிருந்த 16 வயது மச்சினிச்சியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக தெரிகிறது.. இது தொடர்பாக எண்ணூர் மகளிர் போலீஸில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருவள்ளூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை - மருத்துவ சான்றிதழ்கள்
இந்த வழக்கு தொடர்பாக 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன.. அத்துடன், புகார்தாரர் மற்றும் ராஜ்குமார் நாயக் ஆகியோர் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்களிடமிருந்தும் மருத்துவ சான்றிதழ்கள் பெறப்பட்டன.. இவைகளை மகிளா நீதிமன்ற அரசு தரப்பு வழக்கறிஞர் அமுதா விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அனைத்துவிதமான விசாரணையும், கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி போக்சோ வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டு வழக்கறிஞர் நிர்மலா ஆஜராகி வாதாடி வந்தார்.
தற்போது, வழக்கு விசாரணை தொடர்பாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், ராஜ்குமார் நாயக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும், கட்டத் தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி சரஸ்வதி உத்தரவிட்டார். இதனையடுத்து ராஜ்குமார் நாயக் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications