அதிகாலை வந்த புகை.. பயந்து வெளியே ஓடிய மக்கள்.. கண்கள் எரிந்த சம்பவம்! திருவள்ளூரில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடுத்துள்ள திருவள்ளூரில் டீசல் ஏற்றி வந்த டேங்கர் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாகச் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அங்குத் தீப்பற்றி எரிந்து வருகிறது. இதற்கிடையே இன்று காலை தீ விபத்து ஏற்பட்ட போது அதன் அருகே வசித்த மக்கள் இதனால் பதறியும் குழம்பியும் போனார்கள்.

மணலியில் இருந்து திருப்பதி நோக்கி டீசலை ஏற்றிச் சென்ற டேங்கர் ரயில் இன்று காலை திடீரென விபத்தில் சிக்கியது. திருவள்ளூர் அருகே இந்த ரயில் போன போது விபத்து ஏற்பட்டுள்ளது. முதலில் ஒரு டேங்கரில் தீப்பிடித்த நிலையில், பிறகு அது மெல்லப் பரவ ஆரம்பித்துள்ளது. பல மீட்டர் தூரத்திற்கு தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் காலையிலேயே பதற்றம் ஏற்பட்டது.

Tiruvallur people confused as freight train caught fire in early morning

என்ன நடந்தது!

மொத்தம் 52 வேகன்களில் டீசல் ஏற்றிக்கொண்டு அந்த ரயில் மணலியில் இருந்து கிளம்பியுள்ளது. திருவள்ளூரைத் தாண்டிச் செல்லும் போது ரயிலில் திடீரெனத் தீப்பிடித்துள்ளது. 4 வேகன்களில் தீ பரவியிருக்கிறது. அதற்குள் ஸ்பாட்டிற்கு சென்ற தீயணைப்பு அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்ட மற்ற வேகன்களில் தீ பரவுவதைத் தடுக்க அவை தனியாகப் பிரித்துள்ளனர். அவை 500 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டனர். அதீதச் சூடு காரணமாக அதில் தீப்பற்றாமல் இருக்கத் தண்ணீர் ஊற்றி அது குளிர்விக்கப்பட்டது.

என்ன காரணம்!

முதலில் ரயில் தடம் புரண்டதால் தீவிபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும், பிறகே ரயிலில் அதிக உராய்வு காரணமாகவே தீவிபத்து ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேநேரம் ரயில்வே தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலும் அறிவிக்கப்படவில்லை. விசாரணை மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

கண்கள் எரிச்சல்

இந்த தீ விபத்து காரணமாக அருகே வசிக்கும் பொதுமக்கள் குழம்பிப் போனார்கள். அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், மிகப் பெரியளவுக்குப் புகை கிளம்பியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்குக் காலை தூங்கிக் கொண்டிருந்த மக்களை இந்தப் புகை தான் எழுப்பியுள்ளது. திடீரெனப் புகை புகுந்ததால் மக்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கண்களிலும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போன மக்கள் வெளியே ஓடி வந்து பார்த்துள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

அதிகாலையில் ரயிலில் இருந்து இவ்வளவு பெரிய புகை கிளம்பியதால் மக்கள் பயந்து போனார்கள்.. காலையில் என்ன நடந்தது.. எந்த ரயில் எனத் தெளிவு இல்லாததால் அப்பகுதி மக்கள் அச்சப்பட்டனர். சரக்கு ரயில் என்பது அதன் பின்னரே தெரிய வந்தது.

காலை 5.30 மணிக்கு இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் பாதையில் மின்சாரம் முடக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் ரயில் சேவையும் முடக்கப்பட்டது. 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட மொத்தம் 15 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மக்களின் சிரமத்தைப் போக்க சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.

உயிரிழப்புகள் இல்லை

மறுபுறம் தீயை அணைக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. சிறப்பு நுரையைக் கொண்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகிறார்கள். விரைவில் தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது ஆறுதலான விஷயமாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+