நெருக்கமாக இருந்த படங்கள்.. மதுரவாயல் காதலியை பழிவாங்க நினைத்த திருவண்ணாமலை இளைஞர்.. அதிரடியாக கைது
சென்னை: இன்றைக்கு திருமணத்திற்கு முன்பே வேறு ஒரு பெண்ணை அல்லது வேறு ஒரு ஆணை காதலித்திருப்பது என்பது சர்வ சாதாரண விஷயமாக இருக்கிறது. அந்த காதல் ஏதாவது ஒரு வகையில் கைகூடாமல் போயிருக்கும். சுயரூபம் தெரிந்து வாழ்க்கை துணை ஆகாமல் பிரிந்திருப்பார்கள். ஆனால் ஒன்றாக இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட நெருக்கமான புகைப்படங்களைகாட்டி, காதலிக்கு திருமணத்தை நிறுத்த முயற்சிப்பது ஆங்காங்கே நடக்கிறது.. அப்படி செய்த புகாரில் திருவண்ணாமலை இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைக்கு காதலிப்பது என்பது 10 வகுப்பிலேயே தொடங்கிவிடுகிறது.ஒரு பெண் அல்லது ஆண் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பிற்குள் காதலிக்க வில்லை என்றால் அது நிச்சயம் ஆச்சரியம் என்கிற நிலையாக மாறிவிட்டது. அங்கு காதலிக்காமல் கட்டுக்கோப்பாக இருந்தால், கல்லூரிகளில் காதலிக்கிறார்கள். அங்கும் காதலிக்கவில்லை என்றால், வேலைக்கு செல்லும் போது காதலிக்கிறார்கள். இந்த வரையறைக்குள் 90 சதவீதம் பேர் காதலில் விழுகிறார்கள். மீதம் உள்ள 10 சதவீதம் பேரே காதலில் விழுகாமல் பெற்றோர் பார்க்க பையனை அல்லது பெண்ணை திருமணம் செய்கிறார்கள்.

திருமணம்
அதேநேரம் ஒட்டுமொத்தமாக பார்த்தால் 90 சதவீதத்திற்கும் மேல் காதல்கள் திருமணமாக முடிவது இல்லை.. வெறும் 10 சதவீதம் அளவிற்கே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இது சரியான புள்ளி விவரம் இல்லை என்றாலும் எதார்த்தம் இப்படித்தான் இருந்து வருகிறது.
அந்தரங்க புகைப்படங்கள்
அதேநேரம் காதல் திருமணத்தில் முடியாமல் போகும் போது, காதலன், தனது காதலியுடன் எடுத்த அந்தரங்க புகைப்படங்களை காட்டி மிரட்டுவது, தனிப்பட்ட புகைப்படங்களை காட்டி கல்யாணத்தை நிறுத்த முயற்சிப்பது நடக்கிறது. அப்படி திருமணத்தை நிறுத்த முயன்றதாக திருவண்ணாமலை இளைஞர் சென்னையில் கைதாகி உள்ளார்.
மதுரவாயல் பெண்
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் (வயது 32) என்பவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இவர்களின் காதல் கைகூடவில்லை.. திருமணத்தில் முடியவில்லை.
காதல் பிரேக்கப்
இதனிடையே காதலை பிரேக் செய்த இளம்பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த அவரது பெற்றோர், இதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதனை அறிந்து கொண்ட ஜாகிர் உசேன், இளம்பெண்ணை தொடர்பு கொண்டு, நாம் காதலிக்கும்போது இருவரும் சேர்ந்து இருப்பதுபோல் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மாப்பிள்ளை வீட்டாரிடம் காட்டி உனது திருமணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை இளைஞர் கைது
இதனால் பயந்து போன இளம்பெண் சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஜாகீர் உசேன் பற்றி புகார் அளித்தார். இதையடுத்து இளம் பெண் அளித்த புகாரின்பேரில் சென்னை மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இது தொடர்பாக ஜாகிர் உசேனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications