அப்போ TNPSC எதுக்கு விஜய் சார்? கொலை கேஸுக்கெல்லாம் அரசு வேலையா? தவறான முன்னுதாரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை திருவொற்றியூரில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 18 வயது மாணவர் தனுஷ் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பள்ளி வளாகங்களில் அதிகரிக்கும் வன்முறைக் கலாச்சாரம் மற்றும் சிறார் குற்றங்கள் குறித்து தீவிர விவாதங்களை இந்தச் சம்பவம் கிளப்பியுள்ளது.

அதே வேளையில், பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், அவரது சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு, நிர்வாக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் பல முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

chennai vijay

பொதுவாக, கருணை அடிப்படையிலான அரசுப் பணி என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டது. பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள், தேசப் பாதுகாப்பில் உயிர்த்தியாகம் செய்யும் ராணுவ வீரர்கள் அல்லது அரசின் நேரடிக் கவனக்குறைவு மற்றும் அமைப்பு ரீதியான தோல்விகளால் (உதாரணமாக லாக்-அப் மரணங்கள், பேரிடர்கள்) பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இத்தகைய நிவாரணங்கள் வழங்கப்படுவது வழக்கம்.

ஆனால், இரு தனிநபர்கள் அல்லது குழுக்களிடையே ஏற்படும் வன்முறைச் சம்பவங்களில் உயிரிழப்பு ஏற்படும் போது, அரசு வேலை வழங்குவது என்பது வழக்கமான நடைமுறைகளில் இருந்து தவறான முடிவாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உடனடி நிதி நிவாரணமும், நீதியும் வழங்கப்பட வேண்டியது மிக அவசியம். அதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், குற்றச் சம்பவங்களின் போது எழும் பொதுமக்களின் உடனடி கொந்தளிப்பைத் தணிப்பதற்காகவும், சட்டம்-ஒழுங்கு அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவும் அரசு வேலை என்ற வாக்குறுதியை வழங்குவது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் அபாயம் உள்ளது.

மாநிலத்தில் நாள்தோறும் பல்வேறு வகையான குற்றச் சம்பவங்கள், விபத்துக்கள் மற்றும் தனிநபர் மோதல்கள் பதிவாகின்றன. ஒரு குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டும் மக்கள் போராட்டத்தின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு அரசு வேலை வழங்கப்படும் போது, அது பிற பாதிக்கப்பட்ட குடும்பங்களிடையே பாகுபாடு போன்ற தோற்றத்தை உருவாக்கும். எந்தக் குற்றத்திற்கு அரசு வேலை, எந்தக் குற்றத்திற்கு வெறும் நிதி உதவி? என்ற நிலை ஏற்படும், வேறு குற்றத்தில் இறந்த நபரின் குடும்பத்தினர் போய் அரசு வேலை கேட்டால் விஜய் கொடுப்பாரா?

இந்த தெளிவான வரையறை இல்லாத நிலை நிர்வாக ரீதியான குழப்பங்களுக்கு வழிவகுக்கும்.

மேலும், லட்சக்கணக்கான இளைஞர்கள் TNPSC உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் மூலமாகவும், தகுதி அடிப்படையிலும் அரசுப் பணிக்காகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் சூழலில், முறையான பணி நியமன விதிகளைத் தளர்த்தி இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுவது பொது நிர்வாகத்தின் சமநிலையைப் பாதிக்கக்கூடும்.

அரசின் முதன்மையான கடமை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்குத் துரிதமான புலன்விசாரணை மூலம் சட்டரீதியான நீதியைப் பெற்றுத் தருவதும், அரசு நிவாரண நிதியிலிருந்து போதுமான பொருளாதார ஆதரவை வழங்குவதுமே ஆகும்.

மாணவர்களிடையே பெருகிவரும் குழு மோதல்கள், போதைப் பழக்கங்கள் மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தப் பள்ளிகளில் உரிய ஆலோசனைக் கட்டமைப்பை உருவாக்குவதே தற்போதைய உடனடித் தேவை. சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, இதுபோன்ற வேலைவாய்ப்பு அறிவிப்புகளை ஒரு நிவாரண உத்தியாக மாற்றுவது அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்காது. ஸ்கோர் செய்யும் முடிவுகளைத் தாண்டி, தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய நிர்வாகக் கொள்கைகளே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முடிவு தரும்.. ஆனால் அந்த தொலைநோக்கு பார்வை சி.எம் விஜய் சாரிடம் இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+