Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பூனைக்குட்டி" வந்தாச்சு.. "டிட்டோ" மூப்பனார்.. நாள் குறிச்சாச்சு.. "தாமரை" வாசம் வீசும் ஜி.கே.வாசன்

ஜிகே வாசனின் தமாகா, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் சூடாகி உள்ளது.. எம்பி தேர்தலுக்கான பேச்சுவார்த்தைகளும், கூட்டணி விவகாரங்களும் தலைதூக்கி வருகின்றன.. திமுகவுக்கு எதிராக, கூட்டணி அமைக்க போவது யார்? வரும் தேர்தலில் யாருடைய தலைமையில் கூட்டணி அமைய போகிறது? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பாஜக எடுத்து வரும் "மூவ்" குறித்த தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, பாஜகவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காவிட்டாலும், சற்று ஒதுங்கி நின்று அரசியல் செய்யவே நினைப்பதாக தெரிகிறது..

இரட்டை இலை சின்னம், கோர்ட் தீர்ப்பு போன்றவைகள் இன்னும் வெளிவராத நிலையில், எந்த ஒரு கூட்டணி முடிவையும் உடனடியாக எடுக்க முடியாமல் உள்ளதாம்..

சைக்கிள்

சைக்கிள்

ஒருங்கிணைந்த அதிமுகவை எதிர்நோக்கும் பாஜக, தனியாக நின்று தேர்தலை சந்திக்கவும் ரெடியாகி வருகிறது. அந்தவகையில், சில முக்கிய கட்சிகளின் ஆதரவையும் கோரி நிற்கிறது. குறிப்பாக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளை பலப்படுத்தி தன்வசம் வைத்துக் கொள்ளவும் முனைப்பு காட்டி வருகிறதாக சொல்லப்படுகிறது.. அந்தவகையில் முதல் வலையை வாசனிடம் வீசி உள்ளது.. பாஜகவுக்கு நெருக்கமானவராக வாசன் கருதப்பட்டு வந்தாலும், தமாகாவை தனித்தே இயக்கி வருகிறார்.. எனினும், இந்த முறை வாசனிடம், புது டீல் ஒன்றை பேசியுள்ளதாம் பாஜக..

3 புள்ளிகள்

3 புள்ளிகள்

அதன்படி, "உங்களை மத்திய அமைச்சராக்குகிறோம். பாஜகவில் இணைந்துவிடுங்கள்" என்று அட்வைஸ் செய்துள்ளனர்... இதே கோரிக்கையை பாஜக மேலிடம் 3 முறை வைத்தும் மறுத்துவிட்ட வாசன், இந்த முறை சற்று யோசித்தாராம்.. கட்சியினரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறேன் என்று சொன்னாராம். அதன்படியே, சமீபத்தில் சென்னையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற 324 பேரிடமும் இதை பற்றி கருத்து கேட்டுள்ளார் வாசன்.. அவர்களில் 70 சதவீதம் பேர், வாசன் மத்திய அமைச்சராக வேண்டும், அதற்கு கைமாறாக, கட்சியை பாஜகவுடன் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்களாம்..

மூப்பனார்

மூப்பனார்

மூப்பனார் காலத்திலும், தமாகாவை காங்கிரசுடன் இணைக்கும்போது இப்படித்தான், அப்போதைய முன்னணி நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.. அவர்களிடம் முறைப்படி கடிதமும் வாங்கப்பட்டது.. அதுபோலவே, இப்போது வாசனும் நிர்வாகிகளிடம் முறைப்படி கடிதங்கள் வாங்கியிருக்கிறாராம்.. வரும் புத்தாண்டில் இந்த இணைப்பு சாத்தியமாகும் என்றும் சொல்கிறார்கள்.. இதற்கு முன்பும் இப்படித்தான் வாசன், தமாகவை கலைத்துவிட்டு பாஜகவில் வாசன் இணையப்போகிறார் என்ற செய்தி பரபரப்பைக் கிளப்பியது.. "காங்கிரஸ் பாரம்பர்யத்தை சேர்ந்த ஜி.கே.வாசன், மதவாதக் கட்சியான பாஜகவில் சேருவதா? என்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி அப்போதே தன்னுடைய எதிர்ப்பை வலுவாக காட்டினார்..

மூப்பனார் மூவ்

மூப்பனார் மூவ்

ஆனால், உடனடியாக வாசன் அதற்கு பதிலளித்து, பாஜகவில் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.. எனினும் இப்போது அதே பேச்சுதான் மீண்டும் வெடித்துள்ளது. இதற்கு காரணம், கடந்த 2016 சட்டசபை தேர்தல் முதல், தமாகா தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.. அதனால், கட்சியின் எதிர்காலம் குறித்த கவலை, வாசனுக்கு படர்ந்திருக்கலாம், அதன் காரணமாகவே, பாஜகவில் இணைய சம்மதம் தெரிவித்து, நிர்வாகிகளின் கருத்தையும் கேட்டிருக்கலாம் என்கிறார்கள்.. ஆக, பாரம்பரிய காங்கிரஸ், விரைவில் தாமரையில் ஐக்கியமாகிறது போலும்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+