அதிமுகவின் பலவீன கூட்டணிதான்.. எங்களோட பலமே.. உற்சாகமாக சொல்கிறார் சோ.பா. மகன் ரெங்கநாதன்
தமாகாவிலிருந்து சோ பா ரங்கநாதன் விலகி காங்கிரசில் இணைந்தார்.
Recommended Video

சென்னை: அதிமுகவின் பலவீனமான கூட்டணிதான் எங்களுக்கு பலத்தையே தரப்போகிறது என்கிறார் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான சோ.பாலகிருஷ்ணனின் மகன் சோ.பா.ரெங்கநாதன்.
தமாகா இன்னும் யாருடன் யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்யாமலேயே இருக்கிறது. செல்வாக்கும், பாரம்பரியமும் மிக்க தலைவர் மூப்பனாரின் கட்சிக்கே இன்று இந்த நிலைமையா என்பதை நினைத்து வேதனைப்படுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

இந்நிலையில், பாஜக இருக்கும் அணியில் தமாகா இணைய இருப்பதால், அதிருப்தி ஏற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து பெரும்பாலானோர் விலகி வருகின்றனர். இதில் ஒருவர்தான் சோ.பா.ரெங்கநாதன். தமாகாவின் முக்கிய புள்ளியாக இருந்தவர். இப்போது கூண்டோடு விலகி காங்கிரசில் இணைந்துவிட்டார்.

இதை பற்றி "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக அவரிடம் கேட்டதற்கு, "நாங்கள் பிறவி காங்கிரஸ்காரர்கள். பாஜக இருக்கிற பக்கம் தமாகா போகலாமா? அப்படி இணைய இருப்பதாக பேச்சு எழுந்தவுடனேயே தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க நான் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் தமாகாவிலிருந்து விலகி காங்கிரசிலிலேயே சேர்ந்துவிட்டோம்.
ஒருவேளை பாஜகவுடன் இணையவில்லை என்றால் நாங்களும் தமாகாவில்தான் இருந்திருப்போம். இப்போதைக்கு அதிமுகவுக்குள் நிறைய பிளவு இருக்கு. அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இருக்கு. பாஜக ஆட்சியின் மீதுள்ள எதிர்ப்பு அலைகள் அதிகமாக இருக்கு. இதன் காரணமாகவே திமுக-காங்கிரஸ் வெற்றி பெறும். அதிமுகவின் பலவீனமான கூட்டணிதான் எங்களுக்கு பலத்தையே தரப்போகிறது" என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications