சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரூட் கிளியர்.. வாசன் ஏன் " அந்த" ட்வீட் போட்டார்.. முந்திக் கொண்டு "க்ரீன் சிக்னல்" காட்டிய தமாகா..!

Google Oneindia Tamil News

சென்னை: வாசன் ஏன் அந்த ஒற்றை வரியை பதிவிட்டுள்ளார்? என்பதுதான் தற்போதைய அரசியலில் ஹாட் டாபிக்காக உள்ளது..!

தேர்தல் நெருங்குகிறது.. பல கட்சிகள் கூட்டணிகளிடம் சீட் ஒதுக்கி, பேரம், தொகுதிகள் பற்றி பேச்சை மறைமுகமாக ஆரம்பித்துவிட்டன.. அப்படித்தான் தமிழ்மாநில காங்கிரசும் ஆரம்பித்தது.

தமாகா தலைவர் ஜிகே வாசனை பொறுத்தவரை மிக நல்ல மனிதர்.. பெரிதாக சர்ச்சையில் சிக்காதவர்... அநாகரீகமாக பேசாதவர்.. காரணம் மூப்பனாரின் வளர்ப்பு அப்படி!

 விஜயகாந்த்

விஜயகாந்த்

எப்படி விஜயகாந்த்தை எல்லா கட்சி தலைவர்களுக்கும் பிடிக்கிறதோ, அதுபோலதான் வாசனையும் பிடிக்கும்.. விஜயகாந்த்தை போலவே பிரதமர் மோடியின் மனசை வெகு சீக்கிரத்தில் கவர்ந்தவர். வாசன் நினைத்திருந்தால், நெருக்கத்தை காட்டி பாஜக தலைமையிடம் மத்திய அமைச்சர் பதவி உட்பட பல பதவிகளை பெற்றிருக்க கூடும்.. ஆனால் அவர் செய்யவில்லை.. செய்யவும் மாட்டார்..!

நெருக்கடி

நெருக்கடி

எனினும் வீழ்ந்து கிடக்கும் தன்னுடைய கட்சியை தூக்கி நிறுத்தக்கூடிய நெருக்கடியில் வாசன் இருக்கிறார்.. தமிழக காங்கிரஸ் தலைவர், அகில இந்திய செயலாளர், 2 முறை ராஜ்யசபா எம்பி, 2 முறை மத்திய அமைச்சர் என்று பல பதவிகளை வகித்த வாசன் தன் கட்சியை பலமாக வழிநடத்த முடியாமல் தோற்று போயும் உள்ளார். அதனால்தான், இந்த முறை அதிக சீட்கள் வேண்டும் என்று வாசன் அதிமுகவிடம் கோரிக்கை வைத்தார்..

 நிர்ப்பந்தம்

நிர்ப்பந்தம்

தேமுதிக போல, தமாகா மீது அதிமுகவுக்கு எந்தவித அதிருப்தி இல்லை என்றாலும், திமுகவை சமாளிக்க கூட்டணிகளுக்கு குறைந்த சீட்களை ஒதுக்கும் முடிவில் இருக்கிறது.. அதனால்தான் வாசன் கேட்ட இரட்டை இலக்க சீட்டுகளை ஒதுக்க முடியாத சூழலில் உள்ளது.. இதை வாசனும் அறியாமல்.. அதனால்தான், ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அதிமுக கூட்டணியில் அதிக இடங்களைக் கேட்டு நிர்பந்திக்கமாட்டோம். அதிமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம் என்று திட்டவட்டமாக பதிவிட்டிருந்தார்.

 அதிமுக

அதிமுக

இதன்மூலம் 2 விஷயங்கள் தெரிகிறது.. ஒன்று, அதிமுகவை விட்டால் வாசனுக்கு வேறு எங்கும் இப்போதைக்கு போகமுடியாது.. பாஜக 3வது அணி அமைத்தால் வேண்டுமானால் அவர்களுடன் இணைந்திருக்கலாம்.. ஆனால், பாஜகவே அதிமுக கூட்டணியில் இருப்பதால், தமாகாவும் இணைந்துதான் தேர்தலை சந்திக்க வேண்டி உள்ளது.. மற்றொன்று, அதிமுக மிக குறைவான இடங்களையே தமாகாவுக்கு தரும் என்ற யதார்த்தமும் வாசன் உணர்ந்துள்ளார்.. அதனால்தான், எவ்வளவு சீட் தந்தாலும் ஓகே என்ற முடிவுக்கு இறங்கி வந்துள்ளார்.

 இழுபறி

இழுபறி

இதனால், அதிமுக கூட்டணியில் தமாகா ஐக்கியமாகி உள்ளதுடன், கூட்டணி வெற்றிக்கு வாசன் பாடுபட ரெடியாகி விட்டார் என்ற ஐடியாவையும் வெளிப்படுத்தி உள்ளார்.. தேமுதிக, பாஜக, பாமக போன்றவை இன்னும் இழுபறியில் உள்ளபோது, முதல் கட்சியாக அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளது தமாகா.

 பச்சை சிக்னல்

பச்சை சிக்னல்

சீட் எண்ணிக்கை, வாக்கு சதவீதம் போன்றவற்றைவிட, தமிழகத்தின் பல இடங்களிலும் பரவலாக தமாகாவினர் உள்ளனர்... இது அக்கட்சிக்கு ஒரு பிளஸ்.. மேலும் தமாகா சிறுபான்மையினருடன் எப்போதும் இணக்கமாக இருக்கும் கட்சி.. அதனால் இதுவும் ஒரு பிளஸ்தான்.. இதுபோக சமுதாக வாக்குகள் தஞ்சை பகுதிகளில் கொட்டி கிடக்கிறது.. இதுவும் ஒரு பிளஸ்தான்.. அதனால், அதிமுக என்ன சீட் ஒதுக்குகிறதோ, அவற்றிற்கு தமாகா நியாயம் செய்யும் என்றே நம்பலாம்...!

English summary
TMC will contest in ADMK alliance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X