ஜான் பாண்டியனுமா.. ஆட்சியில் பங்கு அவங்களா கொடுத்தா ஓகே.. ஆனால் 10 சீட் வேணும்.. ஒரே போடு!
சென்னை: "என்.டி.ஏ கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்டிருக்கிறோம். ஆட்சியில் பங்கு கேட்கவில்லை ஆனால் கொடுத்தால் நன்றாக இருக்கும்." என கூட்டணி சீட் பங்கீடு குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டன.

அதிமுக - தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக (அன்புமணி), தமமுக, தமாகா, புதிய நீதிக்கட்சி, தென்னிந்திய பார்வர்டு பிளாக், ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்நிலையில் கொங்கு முன்னேற்ற கழகம் தங்கவேல், கொங்குநாடு முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமி ஆகியோரும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு சில கட்சிகள் NDA கூட்டணியில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். இன்னும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணிகள் அறிவிக்க நாட்கள் இருக்கும் நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சில கட்சிகள் என்.டி.ஏ கூட்டணியில் வந்து இணையலாம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்தது. 10 தொகுதிகளின் லிஸ்ட் கொடுத்து தங்களுக்கு ஒதுக்குமாறு வலியுறுத்தி உள்ளதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். "ஆட்சியில் பங்கு கேட்கவில்லை ஆனால் கொடுத்தால் நன்றாக இருக்கும்." என கூட்டணி சீட் பங்கீடு குறித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் பேசியுள்ளார்.
தமமுக தலைவர் ஜான் பாண்டியன், தமிழக பாஜக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை கடந்த மாதம் 22 ஆம் தேதி சந்தித்தார். அதைத்தொடர்ந்து, கூட்டணியில் தமமுக இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டது. அடுத்த நாள் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ கூட்டனி பொதுக்கூட்டத்தில் தமமுக தலைவர் ஜான் பாண்டியன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications