பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. தமிழகம் மற்றும் புதுவை 95% பேர் தேர்ச்சி!
Recommended Video
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.
கடந்த மாதம் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 11ம் வகுப்புக்கு மார்ச் 6 முதல் 22ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுக்க மொத்தம் 8.21 லட்சம் பேர் 11ம் வகுப்பு தேர்வெழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்சபா தேர்தல் நடக்க இருந்ததால் எப்போதும் நடப்பதை விட மிக வேகமாக 11ம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்தது. இந்த நிலையில் 11ம் வகுப்பு பொதுத்தேர்விற்கான முடிவுகள் இன்று காலை வெளியாகி உள்ளது.
www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய பக்கங்களில் சென்று மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். எப்போதும் போல இந்த அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறப்பு தேதி ஆகியவற்றை அளித்து முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். அதேபோல் மாணவர்கள் தங்கள் பள்ளியிலும், கல்வித்துறை அலுவலகத்திலும் இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும்.
இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுவையில் 95% பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். 93.3% மாணவர்கள் தேர்ச்சி, 96.5% மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications