Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது.. நிறைவடையும் +2 தேர்வு! சல்லி சல்லியா நொறுக்கிடுவாங்க.. பறந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் பள்ளிக் கல்வி துறையின் கீழ் 2024 - 2025 ஆம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கிய நிலையில் இன்று நிறைவடைகிறது. மாணவர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் பள்ளிகளில் வன்முறை செயல்களில் ஈடுபடாமல் இருக்க தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்பு கூறலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தமிழகத்தில் இயங்கி வருகிறது. அரசு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என சுமார் 20 ஆயிரம் பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயில்கின்றனர்.

அதில் லட்சக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் நிலையில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வுகள், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு அரசு பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 2024 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான +2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் மூன்றாம் தேதி தொடங்கியது.

2 Exam school education tamil nadu

இதனையடுத்து தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், தமிழ், ஆங்கிலம், விருப்ப மொழி மற்றும் பிற பாடப் பிரிவுகளில் தேர்வு எழுதினர். தமிழகம் முழுவதும் இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித் தேர்வர்கள், 145 சிறை வாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 257 பேர் எழுதினார்.

தமிழக முழுவதும் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 3,316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மாணவர்களை கண்காணிக்க 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், முறைகேடுகளை தடுக்க நான்காயிரத்து 800 பறக்கும் படை அதிகாரிகளும் தேர்வுப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேர்வு நடைபெற்ற பிறகு விடைத் தாள்கள் சீல் வைக்கப்பட்டு பள்ளிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. தேர்வு நடைபெறும் நாட்களில் மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டது. இதற்காக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை மூலம் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று பிளஸ் டூ பொதுத் தேர்வு நிறைவுடைகிறது. மதியம் ஒரு மணியுடன் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் மாணவர்கள் 12 ஆண்டு கால பள்ளி படிப்பை முடித்த மகிழ்ச்சியில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள். புத்தகங்களை வீசி எறிவது, பிற மாணவர்கள் மீது பேனா மை தெளிப்பது, வண்ண பொடிகளை தூவுவது என கொண்டாட்டத்தில் ஈடுபடுவார்கள். அதே நேரத்தில் சில மாணவர்கள் பள்ளிகளில் விளையாட்டுக்காக செய்வது போல சக மானவர்களை தாக்குவது பள்ளிகளில் இருக்கும் பொருட்களை சேதப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

கடந்த ஆண்டு பல பள்ளிகளை மாணவர்கள் சூறையாடிய சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த ஆண்டு பள்ளிகளில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரையும் பள்ளியை விட்டு அன்பான முறையில் வெளியேற்ற வேண்டும், ஒருவேளை பதட்டமான சூழல் ஏற்படும் என தெரிந்தால் உள்ளூர் காவல் நிலையங்கள் மூலம் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+