+2 வகுப்பு, 10ம் வகுப்பு தேர்வு ரிசல்ட்.. மீண்டும் கலக்கிய மாணவிகள்.. இந்த முறையும் இவங்கதான் டாப்!
சென்னை: தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் வெளியாகிறது.
Recommended Video
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் வெளியிடப்பட்டது.
எத்தனை பேர் தேர்வு எழுதினார்கள், எத்தனை பேர் அதில் தேர்ச்சி பெற்றனர் என்று அன்பில் மகேஷ் விளக்கமாக தெரிவித்தார்.

+2 தேர்வு முடிவுகள்
+2ல் இந்த முறை 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 7.55 லட்சம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது. பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

மாணவிகள்
+2ல் தேர்வு எழுதிய மாணவர்களில் 3.84 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 90.96 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் மொத்தம் 4,06,105 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.32 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்ச்சி
இந்த ஆண்டு 9.12 லட்சம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதினார்கள். 10ம் வகுப்பில் 8.21 லட்சம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 4.77 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 3.94 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 10ம் வகுப்பில் - 90.07% மாணவ,மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எங்கு பார்ப்பது?
இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்












Click it and Unblock the Notifications