+2 Result: தமிழ்நாடு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது.. ரிசல்ட்டை எப்படி பார்ப்பது?
சென்னை: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகி உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம். இந்த பக்கங்கள் டவுன் ஆகும் பட்சத்தில், பின் வரும் பக்கங்களில் தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய பக்கங்களில் தேர்வு முடிவை காணலாம்
Recommended Video
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் தேர்வு முடிவு அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மூலம் வெளியிடப்பட்டது. அதன்பின் மாவட்டங்களுக்கு தேர்வு முடிவுகள் உடனே அனுப்பி வைக்கப்பட்டது. இதே நாள் பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்தேர்வு
இந்த முறை பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5ம் தேதி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுக்க மொத்தம் இந்த தேர்வில் 8.5 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வு எழுதினார்கள். 7,534 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் மொத்தமாக தேர்வுகளை எழுதி உள்ளனர். இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக திருத்தப்பட்டன.

வினாத்தாள்
திருத்தப்பட்ட வினாத்தாள் மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அதிகாரிகள் சரிபார்த்து உள்ளனர். இவை தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட இணைய பக்கங்களில் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2வில் மொத்தம் 93.76 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம் உள்ளது. +2ல் 8.21 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதில் 7.55 லட்சம் பேர் பாஸ் ஆகி உள்ளனர். பிளஸ் 2வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஜூலை மாதம் துணைத்தேர்வு நடைபெறும்.

தேர்வு முடிவுகள்
+2ல் தேர்வு எழுதியவர்களில் மாணவர்கள் 3.84 லட்சம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 90.96 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் 4,06,105 மாணவிகள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.32 சதவிகித மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அன்பில் மகேஷ்
தேர்வு முடிவுகள் பற்றி அமைச்சர் அன்பில் மகேஷ் அளித்த பேட்டியில், மதிப்பெண் விபரங்களை காலை 10 மணி முதல் மாணவர்கள் இணைய தளங்களில் பார்க்கலாம் எஸ்எம்எஸ் மூலமும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். கொரோனா கால கட்டத்தில் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். மே மாதம் பிளஸ் 2 தேர்வுகளை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர், என்று குறிப்பிட்டுள்ளார்.
-
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்!












Click it and Unblock the Notifications