TN 2026: "டிஎன் 2026" திரைப்படம் வெளியாவதில் சிக்கல்.. தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
சென்னை: தம்பி ராமையா கதை வசனத்தில் அவரது மகன் உமாபதி இயக்கத்தில் உருவாகியுள்ள "டிஎன் 2026" திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. படத்தை வெளியிட அனுமதித்தால் நியாயமான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கும் எனவும், தமிழக தேர்தல் நடந்து முடியும் வரை இந்த திரைப்படத்தை வெளியிடக் கூடாது என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
"டிஎன் 2026" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனரும், நடிகருமான தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நட்டி நடராஜன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன்பு டிஎன் 2026 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இதில் முழுக்க அரசியல் படமாகவும், ஒரு நடிகர் அரசியல் ஆரம்பிப்பது போன்றும் உள்ளது.

இந்த டிரெய்லரை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் விஜய்யை விமர்சித்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறார்கள். ஆனால் படக்குழு இதனை மறுத்து வந்தது. விஜய்யின் ஜனநாயகன் படமே இன்னும் வெளியாகவில்லை. அரசியல் படம் என்பதாலும், தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும் படத்தை வெளியிட தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும்.
அப்படி இருக்கையில் அரசியலை மையப்படுத்தி எடுத்துள்ள டிஎன் 2026 படம் மட்டும் எப்படி வெளியாக உள்ளது. அதற்கு தடை விதிக்க மாட்டார்களா? என தவெகவினர் கூறி வந்தனர். இந்த நிலையில் டிஎன் 2026 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், தமிழக சட்டசபை தேர்தல் முடியும் வரை டி.என் 2026 திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். படம் முழுக்க அரசியலை மையப்படுத்தி எடுத்து இருப்பதாக தெரிகிறது. எனவே படத்தை வெளியிட அனுமதித்தால் நியாயமான தேர்தல் நடைபெறுவதை பாதிக்கும்" என்று கூறியுள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications